பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

BC) நினைவு அலைகள் பழக்கத்தால் மாடுகளும் செக்கைச்சுற்றும்; நானும் பழைய பழக்கக் கொடுமையால் நொடியில் யார் மேலும் படாது, மிகக் கவனமாக நடுவே வந்துவிட்டேன். எனக்கும் திருநீறு கிடைத்தது. அதைப் பூசிக் கொண்டேன். எல்லோரும் வழிவிட்டு விலகி வந்தபிறகு, சுப்பிரமணியரைத் துக்கிச் சென்றார்கள். - நான், சூரசம்மார வேடிக்கையைப் பார்ப்பதற்குச் செல்லவில்லை. வீட்டோடு நின்று விட்டேன். படுக்கையில் படுத்தேன். தூக்கம் வந்தால் தானே! நெடுநேரம் புரண்டேன். அய்யரின் சுடுசொற்கள் நெஞ்சில் நெருஞ்சி முள்ளாகத் தைத்தது. அந்த வேதனையோடு தூங்க முடியுமா? நான் அய்யர் செய்ததைத் தொட்டுவிட்டதால், அவர் தீட்டாகி விடுவதாகக் கோபிக்கிறார். அவர் உயர்ந்தவர் என்று ஒப்புக்கொள்ள என் மனம் மறுக்கிறது. ஆனால், சாமியை நம் வீட்டுக்கே கொண்டு வரும் பணி செய்வோர்களை நாம் தொடுகிறோமா? நாம் மேல் சாதியாக நினைக்கிறோம். அதனால் அவர்கள் நம்மைத் தொடக்கூடாது என்பது நாட்டு வழக்கு. நான் அய்யருக்குச் சமமாக மதிக்கப்பட விரும்புகிறேன். அது அதோடு நிற்கலாமா? அந்த நியாயம் எல்லாருக்கும்தானே பொது. சில சாதிக்காரர்களை நான் சின்னசாதியாக நினைத்தால், அய்யர் எங்களைக் கீழ்ச் சாதியாக நினைக்கிறார். அய்யரைப் பார்த்து எந்த வாயால் சமத்துவம் கோருவது? - பிறர் உன்னை எப்படி நடத்த வேண்டுமென்று நினைக்கிறாயோ, அப்படி, நீ பிறரை நடத்தினால் அல்லவா யோக்கியன்? ஆமாம்! அய்யரை உயர்ந்தவராக ஏற்கமாட்டேன். அதே நீதிப்படி, பணி செய்வோரை, வன்னியரை, ஆதிதிராவிடரை மற்றவர்களைத் தாழ்ந்தவர்களாகக் கருதமாட்டேன். 'நான், எவரையும் தாழ்ந்தவர்களாகக் கருதமாட்டேன். 'நான், எவரையும் தாழ்ந்தவராக நடத்தாதபோதே, மற்றவர் எவரையும் உயர்ந்தவராகக் கருத மறுக்கும் உரிமை எனக்கு உண்டு. "அதை ஊருக்குச் சொன்னால் கேட்பார்களா? மற்றவர்களைத் திருத்துவதற்குமுன் உன்னையல்லவா திருத்திக் கொள்ளவேண்டும். சரி என் நடத்தையால் அந்த உரிமையைப் பெறுவேன்?' என்று முடிவு செய்தேன். சின்னப் பையனாகிய நான் எப்படி? எங்கே தொடங்குவது?" என்பதைப் பற்றியும் நெடுநேரம் சிந்தித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/122&oldid=786865" இலிருந்து மீள்விக்கப்பட்டது