பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. உடன் படித்த நண்பர்கள் பள்ளி நண்பர்கள் எல்லோருடைய இயல்பும் ஒன்றாயிருப்பதில்லை. ஒவ்வொரு வருக்கு ஒவ்வோர் இயல்பு அமைகிறது. முயற்சியால் இயல்பை மாற்ற இயலும்: ஒதுங்கி நிற்றல் என் இயல்பு. இதை மாற்றிக் கொள்ளக் தவறிவிட்டேன். இளமையிலும் எனக்குக் கூச்சம் அதிகம். இன்னும் அப்படியே இருப்பினும் இளமைப் பருவந்தொட்டு எனக்கு நட்புச் செல்வம் உண்டு. என்னோடு படித்த எவரோடும் நான் முரண்டிக் கொண்டதில்லை. எவரையும் பகைத்துக் கொள்ளவில்லை. ஆயினும் சக மாணவர்கள் அத்தனை பேரையும் நண்பர்கள் என்று சொன்னால் அது பொய்யாகும். சிலரே நெருக்கமான நண்பர்கள். அவர்களுடைய நட்பு எனக்குப் பலவகையில் உதவிற்று. சிலர் போட்டி உணர்வைக் கிளறினார்கள். சிலர் சமத்துவச் சிந்தனையைத் துரண்டினார்கள். என் நண்பர்கள் ஒரே சமயத்தவரா? இல்லை. ஒரே சாதியினரா? இல்லை. பொருள் நிலையில் ஒன்றா? இல்லை. இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறுத்தவர்கள் ஆகியோர் எனக்கு மிகவும் வேண்டியவர்களாக இருந்தார்கள். பல சாதி மாணவர்களும் எனக்கு நெருக்கம். செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகளும் சாதாரண வீட்டுப்பிள்ளைகளும ஒன்றாகவே என்னோடு பழகினார்கள். ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளியில் வடமொழி ஆசிரியராக இருந்த திரு. சாஸ்த்திரியாரின் மகன் சு. இராமசாமி எனக்கு நெருக்கமானவர்; சுப்பாராவ் என்பவர் மற்றோர் நண்பர். இவர்கள் ஆறாம் வகுப்பிலிருந்தே நண்பர்கள். மோசஸ் மாசிலாமணி, பால் சுந்தரராஜ் என்பவர்களும் அப்படியே. அப்துல் வகாப் என்பவர் பிறிதொரு நண்பர். இவர் கால்பந்தாட்டத்தில் மிகவும் கெட்டிக்காரர். அப்துல்சத்தார், பார்த்தசாரதி, மற்றொரு இஸ்லாமிய இளைஞர் ஆகிய மூவரும் வாலாஜாபாத் கிறித்துவ நடுநிலைப் பள்ளிக்கூடத்தில் எட்டாவதைப் படித்து முடித்தவர்கள். மேல் வகுப்புகளுக்கு, காஞ்சிபுரம் வந்தார்கள். நாள்தோறும் புகைவண்டியில் காலையில் வந்து மாலையில் திரும்புவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/127&oldid=786870" இலிருந்து மீள்விக்கப்பட்டது