பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 87 பார்ப்பனரல்லாத தோழர்களும் மரபு வழிக் கல்விக்கு அப்பால் போகாத குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தற்குறிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்லர் ஆயினும் கல்வி மணம் அப்போதுதான் கலந்தது. இக் கால்கட்டு ஒரளவு வளர்ச்சிக்குக் குந்தகமாக அமைந்தது. ஆதி திராவிட மாணவர்கள் படிக்கவில்லை. நாங்கள் எல்லோரும் நடுத்தரக் குடும்பத்தவர்கள்: ஏழ்மை யென்னும் நாசினி எங்களை வாட்டாமையால் ஏதோ படித்துச் சமாளிக்க முடிந்தது. - அந்தக் காலத்தில் உயர்நிலைப் பள்ளியில் என்னுடன் ஆதிதிராவிட மாணவர்கள் படிக்கவில்லை. காஞ்சிபுரம் போன்ற பெரிய நகரத்தில்கூட உயர்நிலைப் பள்ளிக்கு வருமளவு ஆதிதிராவிடர்களிடையே கல்வி பரவவில்லை. உணர்வும் ஏற்படவில்லை. உதவியும் கிடைக்கவில்லை. அந்தக் காலத்தில் சம்பளச்சலுகை இல்லை. இது நான் பள்ளி இறுதிப் படிப்பை முடித்த 1928லும் இருந்த அவல நிலை. எனவே, ஆதிதிராவிடர்களின் ஆற்றலையும் உணர்வையும் தெரிந்து கொள்வதற்குக் கல்லூரிப் பருவம் வரையில் காத்திருக்க வேண்டிய தாயிற்று. சோற்றுக்கே தாளம் போட்டுக் கொண்டிருந்த அவர்கள் எப்படிப் படிக்க முன் வருவார்கள். * நண்பர்களின் வளர்ச்சி என்னுடைய நண்பர்கள் வளர்ச்சியையும் காட்டுவது முறை. இராமசாமி, பள்ளி இறுதித் தேர்வில் எங்கள் பள்ளியின் முதல் மாணவராகத் தேறினார். கீழ் வகுப்புகளில் முதலிடத்துக்குப் பெரும்பாலும் நானும் அவரும்தான் போட்டியிடுவோம். சென்னைக் கிறுத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். இண்டர்மீடியட்டும் இளங்கலைப் படிப்பும் அக்கல்லூரியிலே பெற்றார். கணக்கில் பி.ஏ. பட்டம் பெற்றபின் ஆசிரியப் பயிற்சி பெற்றார். திருவள்ளூரில் கிறுத்துவ உயர்நிலைப்பள்ளியில் கணக்கு ஆசிரியராகப் பணிபுரிந்து உரியகாலத்தில் ஒய்வு பெற்றார். வாய்ப்புகள், பதவிகள், பெருமைகள் குறைந்திருந்த காலகட்டத்தில் அவர் நல்லாசிரியராக விளங்கினார். இருபது ஆண்டுகள் கழித்துப் பிறந்திருந்தால் அவருடைய மதிநுட்பம் அவரை வேறு உயர்நிலைகளுக்குக் கொண்டுபோ' சேர்த்திருக்கும். விருதுகளையும் பெற்றுத் தந்திருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/129&oldid=786872" இலிருந்து மீள்விக்கப்பட்டது