பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 99 அவர்களுக்கு உதவுகிற தோரணையில் இந்திய நாட்டையே அடிமைப்படுத்தி ஆண்டார்கள். மன்னர்களுக்கு அடிமைப்பட்டுப் பழகிவிட்ட பொதுமக்களுடைய மனத்திற்கு, ஆங்கில அரசுக்கு அடிமைப்படுவது இழிவாகத் தோன்றவில்லை; வெறுக்கத்தக்கதாகத் தோன்றவில்லை. 'இராமன் ஆண்டாலென்ன? இராவணன் ஆண்டாலென்ன?" என்னும் சலிப்பில் கிழ்ந்தார்கள். ஆங்கில ஆட்சி அதிகாரம் பண்ணியதோடு நிறைவு கொள்ள வில்லை. பின் என்ன செய்தது? இந்தியப் பொருளாதாரத்தை, தொழில்களை அடியோடு நசுக்கியது: பல்வேறு வழிகளில் இந்திய சமுதாயத்தைச் சுரண்டியது. ஆட்சியும் பொருளும் பொல்லாத போதைப் பொருள்கள் அல்லவா? எத்தனை காலம் ஆங்கிலேயர்களுக்கு அகந்தை ஏறாமல் இருக்கும்? நம் நாட்டு மக்களை இழிவாக நடத்தத் தொடங்கினார்கள் பெரும் பதவிகளுக்கு நம்மை இலாயக்கற்றவர்களாகக் கருதினார்கள். ஆங்கிலேயர், தங்கள் நாட்டுக் கல்வி முறையை இந்தியாவில் புகுத்தினார்கள். அரசு அலுவல்களின் கீழ்த்தட்டுகளுக்கு, பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இங்கிலாந்திலிருந்து ஆட்களைக் கொண்டு வருவதைவிட இந்தியர்களையே ஆயத்தஞ் செய்வது ஆதாயமாகும் என்று எண்ணினார்கள்; அப்படியே இருந்தது. மெக்காலே பிரபு இந்தியாவில் நுழைத்த மேனாட்டுக் கல்வி முறை அரசு ஊழியர்களை மலிவாகப் பெறுவதற்குத் துணையாக நின்றது. கால் நூற்றாண்டிற்குப்பின், அரசின் பெரிய பதவிகளைப் பெறுவதற்கும் இந்தியர்கள் தகுதியானவர்களே' என்னும் எண்ணம் முளைத்தது. காங்கிரசின்தோற்றம் ஆங்கிலேயருக்குக் கொடுக்கப்படும் பதவிகள் இந்தியர்களுக்குக் கிடைக்கவும் வழி செய்ய வேண்டும். இந்திய ஆட்சி அணி என்னும் பதவிகள் இந்தியர்களுக்கும் கிடைக்கவேண்டும். அதற்கான தேர்வு இங்கிலாந்தில் மட்டும் நடப்பது சரியல்ல. அதே நேரத்தில் இந்தியாவில் நடத்தப்பட வேண்டும். இத்தகைய கோரிக்கைகள், முதலில் காட்டுக்கூச்சல்களாகக் கிளம்பின. பிறகு அனைத்திந்திய காங்கிரசு' என்னும் அமைப்பு தோன்றியது. அதன் வாயிலாக, பதவிப் பங்கு கோரப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/141&oldid=786889" இலிருந்து மீள்விக்கப்பட்டது