பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 நினைவு அலைகள் டி.எம். நாயர் இட்ட தீ! 'நான் மிரட்டவில்லை. நடந்ததைச் சொல்லுகிறேன். எங்கேயோ! எப்போதோ நடந்ததாக, யாரோ சொன்னதைச் சொல்லவில்லை. 'இந்தப் பத்திரிகைகளிலே வந்ததையே சொல்லுகிறேன். 'அங்கே சன்னதி தெருவில், தாழ்த்தப்பட்டவர்கள் நடக்க உரிமை கேட்பதற்கு முன்பே, நம் சென்னைப்பட்டினத்தில் நடந்ததைக் கேளுங்கள். "1917ஆம் ஆண்டு சென்னை எழும்பூர் ஏரியில், ஆதிதிராவிடர்கள் கூட்டம் போட்டார்களாம். சொல்ல முடியாத பெரிய கூட்டமாம். தலைமை தாங்கியவர் எம்.சி. இராஜா என்பவராம். இரட்டைமலை சீனிவாசன் என்பவர் பேச்சாளராம். இரண்டு பேரும் பட்டினத்தில் பரவலாகத் தெரிந்த ஆதிதிராவிடத் தலைவர்களாம். 'அதுபோக, நம் ஊருக்கு நாலு கல்லில் இருக்கும் அங்கம்பாக்கத்தில் இருந்து சென்னைக்குப்போன மதுரைப் பிள்ளை என்பவர், அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களில் முக்கியமானவராம். அந்தக் காற்று நம் ஊருக்குத் திரும்பலாம். இப்ப, எது நடக்காது? 'எழும்பூர் ஏரிக் கூட்டத்தில் என்ன பேசினார்கள்? தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்று பேசினார்கள். டாக்டர் டி.எம். நாயர் என்பவர் நீதிக்கட்சியை நிறுவிய தலைவர்களில் ஒருவர். அவர் சொன்னாராம்: 'ஆதிதிராவிடர்களாகிய நீங்கள், எவ்வளவு வறுமையில் வாடினாலும் பல்லைக் கடித்துக் கொண்டு உங்கள் பையன்களைப் படிக்க வைத்துப் பட்டதாரிகளாக்கி விடுங்கள். "'உங்கள் இளைஞர்கள் பட்டதாரிகளாகி ரெவின்யூ இன்ஸ்பெக்டர்களாக, போலீஸ் இன்ஸ்பெக்டர்களாக, தாசில்தாரர்களாக வரட்டும். அப்பதவிகளோடு, அவர்கள் எந்த அய்யர் வீட்டில் நுழைந்தாலும், எந்தப் பெரிய சாதிக்காரன் வீட்டில் நுழைந்தாலும், அவ்வீட்டுக்காரர் களுக்கு நீ வெளிய்ே நில்' என்று சொல்லும் துணிச்சல் வராது. 'நீங்கள் படித்து, பட்டம் பெற்று, அரசின் பதவிகளில் நிரம்பினால் மட்டுமே தீண்டாமை ஒழியும். வாயை வயிற்றைக் கட்டியாவது படிக்க வைத்து விடுங்கள். 'படித்த ஆதிதிராவிடர்கள் எல்லோருக்கும் ஆங்கிலேய ஆட்சி வேலை கொடுக்கும். எனவே படிப்பு, படிப்பு என்று கருத்தாய் இருங்கள் என்று முழங்கினாராம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/148&oldid=786902" இலிருந்து மீள்விக்கப்பட்டது