பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | [J நினைவு அலைகள் 'விளையாட்டு வினையாகிவிட வேண்டாம். கிணறு வெட்ட பூதம் கிளம்ப வேண்டாம். பேச்சு வாக்கிலே வந்ததை அப்படியே மறந்துவிடுங்கள். 'யார் வீட்டிலும் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய வேண்டாம். தெருவேயும் போகவேண்டாம். இப்படியே காலம் ஒடும் வரைக்கும் ஒடட்டும். நாமா வம்பை விலைகொடுத்து வாங்க வேண்டாம்' என்று பெரியார் ஒருவர் அமைதிப்படுத்த முயன்றார். நேரமாகிவிட்டது என்று எல்லோரும் நழுவி விட்டார்கள். என் தந்தையோ திண்ணையில் உட்கார்ந்தபடியே நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார். அறைகூவல் எப்படி முடிந்தது? அடுத்துக் கவனிப்போம். 12. ஆதிதிராவிடரின் இல்லப் பிரவேசம் குருக்களின் துது ஊரைத் திருத்துவதற்கு முன்பு தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும். முதலில் என் வீட்டினுள் தாழ்த்தப்பட்டவரை வரவிட வேண்டும்; அப்படிச் செய்த பிறகு ஊரின் பொதுத் தெருவில் ஆதிதிராவிடரை நடக்க வைத்தால் வெற்றி பெறுவோம். இப்படி முடிவு செய்தார் என் தந்தை. எங்கள் நிலத்தில் பயிர் வேலை செய்யும் ஆதிதிராவிடர் ஒருவரை அடுத்த நாள் வீட்டிற்குள் வரும்படி அழைத்தார். அதுவரை வீட்டை ஒட்டியுள்ள மாட்டுத் தொழுவத்தோடு நின்றே பழகியவர் அவர். எனவே தயங்கினார். தந்தை விடவில்லை. தந்தையின் வற்புறுத்தலால், அவர் வீட்டிற்குள் வந்தார். தாழ்வாரத்தில் நின்றார். நெருப்பில் நிற்பவர்போல் அவர் முகக்குறி இருந்தது. நொடியில் அங்கிருந்து திரும்பிப் போய் விட்டார். H இந்தச் செய்தி நொடியில், காட்டுத் தீ போலப் பரவிவிட்டது. ஆளுக்கு ஒருவகையில் சபித்தார்கள். எதிர்பாராத இந்த அதிர்ச்சியிலிருந்து என் உறவினர்கள் விடுபட நேரமாயிற்று. அதிர்ச்சி அகன்றதும் சிந்தனை வேலை செய்தது. தூது அனுப்ப முடிவு செய்தார்கள். அதை நிறைவேற்றினார்கள். உள்ளுர்க் குருக்கள் ஒருவர் என்தந்தையிடம் தூது வந்தார். வந்த திரு. சுப்ரமணியக் குருக்கள், என் தந்தைக்கு மிகவும் வேண்டியவர்; அநேகமாக அதே வயதினர். அவர், எதையும் இதமாகச் சொல்லக் கூடியவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/152&oldid=786912" இலிருந்து மீள்விக்கப்பட்டது