பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 111 என் தந்தையைத் தேடி வந்தவர், எதை எதையோ பேசினார். நெடு நேரம் இருவருக்கும் பிடித்தவை பற்றிப் பேச்சு இனிமையாக வளர்ந்தது. கடைசியில் தாம் வந்த துதுச் செய்தியை மெல்ல வெளியிட்டார். 'எல்லாரும் மனிதர்கள்தானே. எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும் ஒருவருடைய மானத்திற்கு அறைகூவல் விடுவது தவறு. 'யானைக்கும் அடி சறுக்கும். 'இது பொய்யல்ல என்பதை நேற்று கண்டோம். யாரும் வேண்டுமென்று உங்களுக்குச் சவால்விடவில்லை. பேச்சோட்டம் அந்நிலைக்குத் தள்ளிவிட்டது. உங்களுக்கு வேண்டியவரே கெட்ட எண்ணம் ஏதுமின்றியே, உங்களைச் சண்டைக்கு இழுத்து விட்டார். 'தன்மானத்தை விற்றுவிடு என்று நாங்கள் சொல்லுவோமா? அதனால்தான் நேற்றுக் கண்டிப்போடு சொல்லவும் இல்லை. அதைப்பற்றி வாக்குறுதி கேட்கவும் இல்லை. 'உங்கள் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள அவர் அறைகூவலை ஏற்றுக்கொண்டீர். ஆதிதிராவிடரை வீட்டுக்குள் நுழையச் செய்து விட்டீர். அதற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும் என்று சொல்லி உம்முடைய ஆத்திரத்தை மூட்ட விரும்பவில்லை. "நான் மட்டுமல்ல, என்னைத் தூது அனுப்பிய உம் உறவினர்கள் அத்தனை பேரும் நடந்ததை கனவு போல எண்ணி மறந்துவிடச் சித்தமாய் இருக்கிறார்கள். 'நீங்கள் உங்கள் உறுதியைக் காட்டிவிட்டீர்கள். அதோடு முடியட்டும். நாலு நாள் ஆனால், எல்லோரும் மறந்து போவார்கள். அவர்களும் வந்து உரிமை கேட்கப் போவதில்லை. - "சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுக்கக் கூடாது என்பார்கள். அதைப் போல, எவனோ அறைகூவல்விட, நீங்கள் ஏன் தொல்லையை விலைக்கு வாங்க வேண்டும்? உடனடியாகக்கூட பதில் வேண்டாம். பொறுத்து, சிந்தித்துச் சொன்னால் போதும். "எங்கள் ஏகோபித்த வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். ஒருமுறை நடந்தது. மறுமுறை நடக்க வேண்டாம். அவ்வளவே நடந்ததற்குச் சமாதானம் கேட்கவில்லை. இரு சாரார் மானமும் காப்பாற்றப்படும்: அமைதி தொடரும். 'என்ன இருந்தாலும் அவர்கள் உறவினர்கள் ஆகப்போவதில்லை. எம் உறவினர்கள் அத்தனை பேரும் உம்மோடு நெருக்கமாக இருப்பவர்களே: உம்மிடம் மதிப்பாக நடப்பவர்களே! 'இதற்கு மேல் பன்னிப் பன்னிப் பேசத் தேவையில்லை. அவர் களைப்பார்த்து, சொல்லி யனுப்பியதைச் சொல்லிவிட்டேன். அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/153&oldid=786914" இலிருந்து மீள்விக்கப்பட்டது