பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ_து-சுந்தரவடிவேலு 113 குலப்பெருமையை இழந்துவிடக் கூடாது என்பதே அவர்களின் கவலை. அது குலமானம். அது உங்களுக்குப் புரியும். 'முள் தைத்த மாதிரி ஏதோ நடந்து விட்டது. அதை எளிதாக அப்படியே பிடுங்கி எறிந்துவிட்டால் போகிறது. அதற்குப் பதில் அதோடு நடந்தால், அது ஆழப் பதிந்துவிடும்; அதில் சீழ் பிடிக்கும்; நஞ்சாகும், அதனால் எவ்வளவு கெடுதலாகுமோ தெரியாது! 'நீங்கள் பிடிவாதம் காட்ட, அவர்களும் உங்களவர்தானே. அவர்கள் மறுபக்கம் பிடிவாதம் காட்டினால், எங்கே போய் முடியும் என்று நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. 'அங்கே இங்கே நடந்த மாதிரி, சாதிக்கட்டுப்பாடு செய்யலாமா வென்று நினைக்கிற அளவு, அவர்கள் கழுத்தைப் பிடித்துத் தள்ளலாமா? 'அவர்கள் இப்படிச் சொல்லி அனுப்பினார்கள் என்று நினைத்து விடாதீர்கள் நானாகச் சொல்லுகிறேன். அவ்வளவே. பொறுத்துக் கொள்ளுங்கள். பொறுத்தார் பூமியாள்வார்' என்றார் சுப்ரமணியக் குருக்கள். "பூமியாளும் அவா எனக்கு இல்லை. உண்மையான மனிதனாக இந்தப் பூமியில் வாழ்ந்தால் போதும். 'உறவினர் 'சாதி விலக்கம் செய்தால் என்ன? இவர்கள் சிலரே! அவர்களோ -- ஆதிதிராவிடர்களோ - பலர். அவர்களோடு மிகுந்த மகிழ்ச்சியுடன் சேர்ந்து கொள்கிறேன். 'வீட்டில் பெண் குழந்தை இருந்தால் தொல்லை; எவனும் கட்டிக் கொள்ளமாட்டான் என்று அஞ்ச வேண்டும். இருப்பது பையன்கள்; எப்படியோ பிழைத்துக் கொள்வார்கள். 'நான் மாற்று அறைகூவல் விடுவதாக நினைக்க வேண்டாம். நான் முன்வைத்த காலைப் பின்வைக்க முடியாது. அவ்வளவே. இதை அவர்களுக்கு இதமாகவே சொல்லலாம். "அப்புறம் நடப்பது நடக்கட்டும். எல்லாம் நம் கையில் இல்லை' என்று பதில் கூறி அனுப்பினார். மக்களின் முணுமுணுப்பு குருக்கள் தூது வெற்றிபெறவில்லை. ஆனால் போரும் மூளவில்லை. உறவினர்கள் அதோடு விட்டுவிட்டார்கள் . சில வாரங்கள் எங்கள் வீட்டுத் திண்ணையில் கூடுவது நின்றது. செய்தித்தாள்களை, தனித்தனியாகக் கேட்டு அனுப்புவார்கள்: வாங்கிப் படிப்பார்கள். திண்னைப் பேச்சுக்கள் இல்லாமலே காலம் ஒடிற்று. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/155&oldid=786918" இலிருந்து மீள்விக்கப்பட்டது