பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12O நினைவு அலைகள் அப்போது காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு, பேருந்துக் கட்டணம் எவ்வளவு தெரியுமா? முக்கால் ரூபாய். பேருந்துகளில் ஏறப் பலர் அஞ்சியதுண்டு. துணிந்து ஏறியவர்களில் பலருக்குத் தலைசுற்றும்; வழியில் வாந்தி எடுத்தும் அவதிப் படுவார்கள். பேருந்து ஒட்டிகள், சிலவேளை, வண்டியை மரத்தில் மோதிக் கவிழ்த்து விடுவேன்' என்று, பயணிகளை மிரட்டும் பொருட்டுச் சொன்னதைப் பலமுறை என் காதுகள் கேட்டதுண்டு. பிற்காலத்தில் சொல்லாமலே செய்யும் பெரியவர்களாகி விட்டார்கள். சென்னைக்கு அடுத்த வேலூருக்குப் பேருந்து ஒடத் தொடங்கியது. இதுவும் ஊர் முழுவதும் பரவலாகப் பேசப்பட்ட செய்தி. அவ்வண்டி நேரத்தில் வந்தது; போயிற்று. என் உறவினரும் என்பால் அன்பு பொழிந்தவருமான திரு. எம். எஸ். துரைசாமி முதலியார் என்பவர், வேலூரில் தரகுமண்டி வைத்திருந்தார். அத்துடன் லேவாதேவித் தொழிலும் நடத்தி வ்ந்தார். திரு. எம்.எஸ். துரைசாமி முதலியார், வணிகம் பற்றிக் காஞ்சிபுரத்திற்கு அடிக்கடி வருவார். அவர் காஞ்சிக்கு வந்ததும் எனக்கு உடனே தகவல் வரும். போய்ப் பார்த்தால், தின்பண்டங்களோ காசோ கிடைக்கும். அவர் காஞ்சி வருகையை எதிர்பார்த்த எனக்கு, வேலூர் பேருந்தின் மேல் நோட்டம் அதிகம். முதலில் காலையில் ஒரு வண்டி வரும். அதுவே மாலை திரும்பும். இரண்டொரு ஆண்டுகளில் கூடுதல் வண்டிகள் போட்டார்கள். வேலூர் பேருந்து வண்டியில், கணேசர் சோடா கலர் வந்து இறங்கும். அவை காஞ்சிபுரத்தில் சில கடைகளில் மட்டும் கிடைக்கும். அந்தச் சோடாவுக்கு 'பவர் அதிகம்; அதனால் அதற்குக் கிராக்கி. 'கலர்'களில் எனக்குப் பிடித்தது பன்னிர்க் கலர். உறவினர்கள் கொடுத்த காசெல்லாம் பலகாரங்கள் தின்பதிலும் சோடா கலர் குடிப்பதிலும் செலவழியும். அன்று நூல் விற்பனை நிலையங்கள் கிடையா. எனவே நூல் வாங்கிப் படிப்பதற்கு அன்று வாய்ப்பு இல்லை. பெரும்பாலானவர்கள், மாட்டு வண்டியையே நம்பி இருந்தனர். குதிரை வண்டிகள் சிலவே, ஒற்றை மாட்டு வண்டிகள் நிறைய. நகரசபைத் தலைவர்கூட, குதிரை வண்டியிலேயே வருவார் போவார். அந்த நாளில் அதை யாரும் குறைவாகக் கருதியதில்லை. வசதி படைத்த பணக்காரர்கள்கூட, கார் வாங்காத காலம் அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/162&oldid=786933" இலிருந்து மீள்விக்கப்பட்டது