பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 123 ஆசிய ஜோதி நாடகம் ஒருமுறை சென்னைத் தலைமைச் செயலகத்தில் பணிபுரிவோர் சிலர், மயிலாப்பூர் இராமகிருஷ்ண இல்லத்திற்கு நிதி திரட்டும் பொருட்டுக் காஞ்சியில் நாடகம் நடத்தினார்கள். அப்போது என் தந்தை மணியக்காரர். எனவே அவர் குறிப்பிட்ட அளவு நுழைவுச் சீட்டுகள் விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வேறு வழியில்லை. அவரும் நுழைவுச்சீட்டு வாங்கிக் கொள்ள நேர்ந்தது. அதை எனக்கு அனுப்பிவைத்தார். நான் அந்நாடகத்தைப் ப்ார்த்தேன். அதன் பெயர் ஆசிய ஜோதி. அது புத்தரைப் பற்றிய நாடகம். கதை அமைப்பும் உரையாடலும் நடிப்பும் நெஞ்சை அள்ளின. 14. காஞ்சியில் காங்கிரசு மாநாடு (1925) காஞ்சிபுரத்தில் அரசியல் சூறாவளி வீசாத காலத்தில் நான் படித்தேன். எனவே கவனச்சிதைவு குறைவு. காஞ்சியில் இந்திய விடுதலை இயக்கத்தில் மிக ஈடுபாடுடைய சில பெரியவர்கள் இருந்தார்கள். நீதிக்கட்சியின் தூண்கள் சிலர் இருந்தனர். இரு இயக்கங்களும் இந்நூற்றாண்டின் இருபதின் தொடக்கத்தில் காஞ்சியில் பொதுமக்கள் இயக்கமாகவில்லை. இவற்றால் அன்றைய இளைஞர்கள் கவரப்பட்டு, அவர்கள் படிப்பு வீணாகவில்லை என்றால் மிகை ஆகாது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரசு மாநாடு காஞ்சிபுரத்தில் கூடிற்று. தமிழ்த் தென்றல் திரு.வி.க. தலைமை தாங்கினார். இதற்கு நகர் முழுவதும் நல்ல விளம்பரம். தமிழ்த் தென்றல் திரு.வி.க. அதுவரை கோயில் திருவிழாக்களை மட்டுமே கண்டிருந்த காஞ்சிபுரம் 1925 நவம்பரில் புதியதொரு திருவிழாவினையும் கண்டது. தெருக்களில் வரவேற்பு வளைவுகள் எழுந்தன. பசுந்தோரணங்கள் அசைந்தாடின. தெருவோரங்கள் செப்பனிடப்பட்டன. 'தமிழ்த் தென்றலே வருக! வருக!' என்று பல இடங்களில் வரவேற்புகள் எழுந்து முழங்கின. 'நவசக்தி ஆசிரியரே! வருக! வருக! என்னும் வரவேற்புகள் ஓங்கி உயர்ந்து பறந்தன. இவை யாருக்கு? திரு. வி. கலியாணசுந்தரனாருக்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/165&oldid=786938" இலிருந்து மீள்விக்கப்பட்டது