பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 125 கட்டணம் எட்டனா இந்தத் தகவல்களை அன்பர் கதிர்வேல் திரட்டிக் கொண்டு வந்தார். இருவருக்குமே அன்று, எட்டனா பெரிய தொகையல்ல. அதோடு, திரு.வி.க.வின் வார இதழாகிய நவசக்தி என் தந்தைக்கு வந்துகொண்டிருந்தது. எனவே, திரு.வி.க. தலைமை தாங்கும் மாநாட்டுக்குப் போவதைப் பற்றி என் அப்பா குறைபட மாட்டார் என்றும் எண்ணினேன். நானும் கதிர்வேலுவும் ஆளுக்கு எட்டனா கொடுத்துப் பார்வை யாளர் நுழைவுச் சீட்டினைப் பெற்றோம். மாநாட்டிற்குச் சென்றோம். பார்வையாளர்களுக்குக் கடைக் கோடியில் இடம் ஒதுக்கியிருந்தார்கள். அன்று ஒலி பெருக்கி வசதி இல்லை, எனவே, மேடைப் பேச்சு காதில் விழுமா என்று கவலைப்பட்டோம். 'நாம் இருவரும் குட்டையானவர்கள். தொலைவில் இருந்தால் மட்டுமே, மேடையில் இருப்பவர்கள் நமக்குத் தெரிவார்கள் என்று நாங்களே ஆறுதல் சொல்லிக் கொண்டோம். மாகாண அரசியல் மாநாடு தொடங்கிற்று. சாது முதலியார் திரு.வி.க. தலைமை தாங்கினார். அவருடைய இனிய செந்தமிழ் உரை எங்களுக்கு எட்டவில்லை. காரணம்: ஒலி பெருக்கி இல்லாத பெருங்குறை. முன்னர் ஒருவர் ஆற்றிய வரவேற்புரையும் காற்றிலே பறந்தது. எங்களிடம் வரவில்லை. யாருடைய பேச்சையும் கேட்க முடியாமல், இமை கொட்டாது மேடையை மட்டும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தோம். -- மேடையில் வீசிய புயல் திடீரென மேடையின் மேல் இடி முழக்கம் பேசுவோரின் பேச்சைப் பலரும் ஒரே நேரத்தில் இடைமறித்தல். == == பேச்சு அமளி தொடர்ந்து சிலர் வெளியேறுத்ல்! இவற்றைக் கண்டோம். எடுப்பான தோற்றம், பரந்த நெற்றி, அடர்ந்தமுடி, அடர்ந்த மீசை, சுடர்விடும் விழிகள், முழங்கும் குரல், இடுப்பில் முரட்டுக் கதர், மேலே அதே கதர்ச் சொக்காய். அதற்கு மேல் கதர்ப் போர்வை. இந்தக் கோலத்தில் இருந்த இத்தனையும் உடைய பெரியவர் ஒருவர் மேடையில் இடியென முழங்கிவிட்டு, தம்முடன் சிலரை அழைத்துக்கொண்டு, வெளிநடப்புச் செய்ததை நாங்கள் கான முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/167&oldid=786942" இலிருந்து மீள்விக்கப்பட்டது