பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 நினைவு அலைகள் எப்போதோ ஏற்றங் கொண்டவர்கள். என்றைக்கும் 'எல்லாமும் எங்களுக்கே என்னும் போக்கில் சிறிதும் வளைந்து கொடுக்காத, நம் சமுதாயத் தண்டவாளப்போக்கு, இருவருடைய உணர்ச்சிகளையும் தூண்டி, பாமர மக்களை உயர்த்தும் பணியில் ஒன்றுபடவைத்தது. வள்ளலாகிய அந்தக் கோடீசுவரர் - தியாகராயர் - தம் சொத்தைப் பொதுத்தொண்டில் கரைத்துவிட்டார். அந்த வெள்ளுடை வேந்தர், பொருள் தியாகத்தை மட்டுமா செய்தார்? அதிலும் அரிதாகிய பதவித் துறவையும் செய்து காட்டி உயர்ந்தார். சென்னை மாகாணச் சட்ட அவைக்கு 1920 இல் நீதிக் கட்சி பெரும்பான்மையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அக்கட்சியின் தலைவராகிய தியாகராயரை, அமைச்சரவையை அமைக்கும்படி, முறைப்படி, ஆளுநர் கேட்டுக்கொண்டார். பதவி வெறியால், கட்சியைத் தோற்றுவித்தவர்அல்லரே, பிட்டி. தியாகராயச்செட்டியார். நீதிக்கட்சி ஆட்சியில் கல்வி அம் மாபெரும் தியாகி, தாம் கட்சித் தலைவராக மட்டும் இருந்துகொண்டு, தம்முடைய நம்பிக்கைக்குரிய மூவரைக் கொண்ட அமைச்சரவையை அமைக்கச் செய்தார். இருமுறை, அதாவது ஆறு ஆண்டு காலம் - நீதிக்கட்சி அமைச்சர் அவை தொடர்ந்து நடந்தது. இந்தியத் தலைவர்களில் ஒருவரான கோபாலகிருஷ்ண கோகலே இந்நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியச் சட்டமன்றத்தில், 'நான்காவது வகுப்பு வரை இந்நாட்டுப் பையன்களுக்கும் பெண்களுக்கும் கட்டாய இலவசக் கல்வி கொடுக்க வேண்டும் என்னும் மசோதாவைக் கொண்டு வந்தார். அப்போது நம்மை ஆண்ட ஆங்கில ஆட்சி அதை எதிர்த்தது. எனவே, மசோதாசட்டமாகவில்லை. கோகலேயின் கருத்தினைச் செயல்படவைக்கும் சட்டமொன்றை இயற்றிய பெருமை அவருடைய இயக்கத்தைச் சேராத அன்றைய நீதிக்கட்சியின் அமைச்சரவைக்கு உண்டு. 'சென்னை மாகாண தொடக்கக் கல்விச் சட்டம்' என்று அதற்குப் பெயர். அது, உள்ளாட்சி மன்றங்கள், தொடக்கக் கல்வியை இலவசமாகவும் கட்டாயமாகவும் ஆக்குவதற்கு அவைகளுக்கு அதிகாரம் கொடுத்தது. 'சென்னை மாநகராட்சி உட்படச் சில நகர மன்றங்களும் 'சைதாப்பேட்டை வட்ட ஆணைக்குழு போன்ற சில வட்ட ஆட்சி மன்றங்களும் அவ்வதிகாரத்தைப் பயன்படுத்தி வெள்ளையன் ஆட்சிக்காலத்திலேயே, கட்டாய இலவசக் கல்வியை நடை முறைப்படுத்துவதில் முன்னணியில் நின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/176&oldid=786965" இலிருந்து மீள்விக்கப்பட்டது