பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. படிப்பும் பயிற்சியும் ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு பெரும் ஆலமரம் கல்வி, ஒர் வழி. எதற்கு? ஆள் வளர்ச்சிக்கு. ஆள் வளர்ச்சி' என்னும் போது, உடல் வளர்ச்சியை மட்டுமா குறிப்பிடுகிறோம்? இல்லை; அதற்கு மேலும் கருத்தில் கொள்கிறோம். சின்னஞ் சிறிய விதை. அப் பொடி விதையில், ஒர் ஆலமரமே உறங்கிக் கிடக்கிறது. எத்தனை பெரிய அடிமரம்; எவ்வளவு பரப்பை மூடும் பட்டை எண்ணற்ற இலைகள்; அவற்றைத் தாங்கும் கிளைகள், கப்புகள்; இத்தனையும் சிறு வித்தில் ஒளிந்து கொண்டிருக்கின்றன. விழத் தகுந்த இடத்தில் வீழ்ந்தால், விதை முளைக்கும்; முளைத்த இடத்தில் ஈரம் வேண்டும்; ஈரத்தோடு சூடும் வேண்டும்; சூட்டோடு ஒளியும் தேவை. ஒளியோடு நல்ல காற்றும் கலந்ததா? மகிழ்ச்சி; நன்றாக வளரும். இத்தனையும் இருந்தும் காவல் இல்லையேல்? கண்டவை செடியை மேய்ந்துவிடலாம்; குறும்பர் கிள்ளிவிடலாம்;ஒடித்து விடலாம். நல்ல பாதுகாப்பான இடத்திலேயே ஆலஞ்செடி வளர்ந்து மரமாகிறது. மரமான பிறகு ஆடும் மாடும் மேய்ந்தாலும் அது பட்டுப் போகாது. பொழுது போகாத குறும்பர்கள் ஒடித்தாலும் காய்ந்து விடாது. ஒவ்வோர் குழந்தையையும் பெரும் ஆலமரத்திற்கு ஒப்பிடலாம். உலகம் அறியாப் பச்சைக் குழந்தைகளிடம் புதைந்து கிடப்பவை, பலப்பல. அறிவு, காத்துக் கிடக்கும். வானமளந்தது அனைத்தையும் அளக்கும் பேரறிவு முளைத்து ஓங்கி வளரக் காத்திருக்கும். பேரறிவு எல்லார்க்கும் எட்டுமா? ஆம். நன்றாக எட்டும். வானென விரியும் அறிவு, வளரத் துடிக்கும். சிறுவர் சிறுமியர்களிடம் முளைக்க உந்தும் ஆற்றல்கள் எத்தனையோ ஆற்றல் வளர்ச்சி முதலில், தனியாளுக்கு நன்மை. அதோடு முடிந்ததா கதை? இல்லை. தனி மனிதனோ, மாதோ பெறும் ஆற்றல், ஊருக்கு, நாட்டுக்கு, மக்கள் சமுதாயம் முழுமைக்குமே பயன்படக்கூடும். + தனி மகன் பெறும் ஆற்றலின் வீச்சும், அதைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரிந்த சமுதாயமும் பலனின் அளவை முடிவு செய்யும். சாதுவான மோகன்தாஸ் கரம்சந்த், மக்கள் தலைவராக, புது முறைப் போராட்டத் தலைவராக வளர்ந்ததால், அவருக்கா நன்மை? இல்லை. அவர் குடும்பத்திற்கா ஆதாயம்? இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/179&oldid=786968" இலிருந்து மீள்விக்கப்பட்டது