பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 நினைவு அலைகள் நடந்தோம். பத்துப் பதினைந்து அடிகள் இறங்கியிருப்போம். இருட்டில் வழி தவறிவிட்டது. s தமிழனுடைய பொறாமைச் சூறாவளியைப் போல், காற்றும் மழையும் போட்டியிட்டுச் சீறின. சிறுவர்களாகிய நாங்கள், காற்றோடும் மழையோடும் எப்போதும் போட்டியிட்டதில்லை. இனியும் எப்போதும் போட்டிபோட முடியாது என்பது யாருக்குத் தெரியாது? அதுவரை, மரபுப் பண்பாட்டை மீறியவர்களும் அல்லர். ஆயினும் எங்கள் மேல் ஏன் இத்தனை சீற்றம்? தமிழன்தான், எங்கோ, தன் பாட்டிற்குப் போய்க் கொண்டிருக்கிறவனை, தன்னிலும் எளியவனை, தன்னிலும் அதிக வேதனையில் ஏக்கத்தில் உள்ளவனை, என்றும் தன்னோடு போட்டிபோட முடியாத ஒருவனைக் க்ண்டு பொறாமைப்பட்டுத் தன்னையும் சிதைத்துக்கொண்டு, தன் இன்பத்தையும் அழித்துக்கொண்டு பாழாகிப் போகிறான். அதே போக்குதான் காற்றிற்கும் மழைக்கும். முழுவதும் பொழிந்த பிறகே ஒய்ந்தன. முக்கால் மணி நேரத்தில் ஏறிய அம்மலையில் இருந்து உருண்டு வீழாமல், அடிபடாமல், கைகால்களில் குருதி கொட்டாமல், மலை அடிவாரத்திற்கு இறங்கி வந்துசேர, மூன்று மணி நேரம் பிடித்தது. அம்மூன்று மணிகளும் நான் பட்ட பாட்டிலும், என் தோழர்கள் பட்ட பாடு சொல்லுந் தரத்தது அன்று. அவர்கள், தங்கள் உயிர்களைவிட, என் உயிரையே பெரிதெனப் போற்றினார்கள். ஆளுக்கொரு பக்கம் இருந்து, கைத்தாங்கலாக, யானை ஆய்ந்து பார்த்து அடிவைப்பது போல மெல்ல, மிக மெல்ல, பார்த்துப் பார்த்து என்னை இறக்கிவந்தார்கள். அவர்கள் பேருதவியால், பாதுகாப்பால், நடுக்கமும் குளிரும் தவிர பிறிதொரு தீங்கையும் துய்க்காது வீடு வந்து சேர்ந்தேன். 'வீட்டிலுள்ளோரும் சீறுவார்களோ என்ற அச்சத்தோடு நுழைந்தோம். அவர்கள் அனைவருமே சராசரித் தமிழனிலும் உயர்ந்தவர்கள்; சீறவில்லை; சீராட்டி, ஆறுதல் கூறினார்கள். அன்பும் தியாகமும் திரு.துரைசாமி முதலியார், நான் முதல் முறை வேலூருக்குச் சென்ற போது, மறு நாளே, என்னைத் தம் குதிரை வண்டியில் அழைத்துக் கொண்டு போய், அவருக்கு வாடிக்கையான மிட்டாய்க்கடை அய்யருக்கு அறிமுகப்படுத்தினார். நான், எப்போது வந்தாலும், எவ்வளவிற்குச் சாப்பிட்டாலும், தம் கணக்கில் எழுதிக்கொண்டு, கொடுக்கும்படி கட்டளையிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/192&oldid=786983" இலிருந்து மீள்விக்கப்பட்டது