பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 153 வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னையும் கன்னத்தில் அடித்துக் கொள்ளச் சீண்டினார்கள். பயனில்லை. பேசாமல் இருந்துவிட்டேன். ஐம்பது ஆண்டுகள் ஒடிவிட்டன. ஆயினும் இன்றும் நம் மக்கள் அப்படியே நாடகப் பாத்திரங்களுக்குக் கன்னத்தில் போட்டுக் கொள்ளும் பக்தர்களாக இருக்கிறார்கள். வாழ்க அவர்கள்! நான் மட்டும் என்னவாம்? அப்படியே தானே இருக்கிறேன். 18. புதிய முயற்சிகள் மேடை ஏறினேன் நான் பதினோராவது வகுப்பில் படிக்கையில், எங்கள் உயர்நிலைப் பள்ளியில், தமிழ்மன்றம் முளைத்தது. தொடக்கத்தில் மேல் வகுப்பு மாணவர்களே உறுப்பினர்கள். அப்போது, மன்றப் பதவிகளுக்குப் போட்டியோ, தேர்வோ கிடையாது. உயர்மட்ட வகுப்பில், படிப்பில் முதல் இடத்திற்குப் போட்டி போட்டுக் கொண்டிருந்த என்னைப் பேசவோ, பாடவோ வேண்டும் என்றார்கள். அதுவரை நான் மேடை ஏறியதில்லை; அவையில் பேசியது இல்லை. ஆசிரியருக்குக் கட்டுப்பட்டிருந்த பழக்கம் தட்டிக் கழிக்க முடியவில்லை. தமிழ் அய்யாவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டுத் தலையாட்டினேன். முதல் கூட்டம் வந்தது. அதில் நான் பேசவேண்டும்: இல்லையென்றால் பாடவேண்டும் என்றார்கள். இரண்டும் எனக்குத் தெரியாது. ஆசிரியர் என் பரிதாப நிலைக்குப் பச்சாதாபப்பட்டார். 'மனப் பாடம் செய்துள்ள ஏதாவதொரு பாட்டை ஒப்புவி என்று ஆலோசனை கூறினார். உள்ளத்தை உரப்படுத்திக் கொண்டேன்; மேடையேறினேன்: மூச்சுவிடாமல் ஒப்புவித்தேன். எதை? ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி ஆளினும் கடல்மீதிலே ஆணைசெல வேநினைவர் அளகேசன் நிகராக அம்பொன்மிக வைத்தபேரும் நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/195&oldid=786986" இலிருந்து மீள்விக்கப்பட்டது