பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 நினைவு அலைகள் அக்கால நூற்று ஐம்பது ரூபாய்கள் இன்றைய ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்களுக்கு ஒப்பானவை. எட்டாவதற்கே அவ்வளவு பெரிய சம்பளம் கிடைத்தால் பதினோராவது தேறிய எனக்கு அதிர்ஷ்டம் மட்டும் இருந்தால் பல நூறு சம்பளம் தாராளமாகக் கிடைக்கும். வீணாக, மேலும் மேலும் படிக்க வைக்க வேண்டாம். அதனால் பணச் செலவு மட்டுமா? பட்டினம் போனால் கெட்டுப் போவான் என்பது ஊர் வழக்கு. இவற்றை எடுத்துக்காட்டி, என்னை உயர்நிலைப்பள்ளியோடு நிறுத்திவிடும்படி தாத்தா கூறினார். மீண்டும் மீண்டும் வற்புறுத்தினார். இவ்வழக்குகள் தீரும் மட்டும் தேர்வுகள் காத்திருக்குமா? உரிய காலத்தில் வந்தன; பொதுத் தேர்வுகள் என்னை மிரட்டவில்லை. எங்கள் பள்ளியில் எழுதாமல், பச்சையப்பன் உயர்நிலைப்பள்ளிக்குச் சென்று எழுத நேர்ந்ததும் அச்சமூட்டவில்லை. 'வகுப்பில் கவனமாகக் கேட்டோம். வீட்டில் பொறுப்பாகப் படித்தோம். பாடங்களுக்கு அப்பால் கேட்கப் போவது இல்லை. அப்புறம் அச்சம் எதற்கு என்னும் நம்பிக்கையோடு என் நண்பர்களும் நானும் தேர்வுகளை எழுதினோம். கேள்வித் தாளை முழுவதும் படித்து முடிப்போம். அப்புறமே எழுதவேண்டிய கேள்விகளைத் தேர்ந்தெடுப்போம். அமைதியாக, படபடப்பின்றி எழுதி வந்தோம். ஒவ்வொரு நாளும் நிறைவோடு வெளியேறினோம். பொதுக் கணக்குத்தான் எளிதாகத் தோன்றிற்று. நூற்றுக்கு நூறு வாங்குவேன் என்னும் பூரிப்பு: என்னை அறியாமலேயே மகிழ்ச்சி வயப்பட்டேன்; களிப்பும் தீங்கானதல்லவா? வெளியே வந்து மற்றவர்களோடு ஒப்பிடுகையில், கடைசிக் கணக்கில் வழி சரியாக இருந்தும் முடிவு தவறாகிவிட்டது தெரிந்தது. 19. மனத்தைக் கவர்ந்த மாநிலக் கல்லூரி உயர்நிலைப் பள்ளிப் படிப்பு முடிந்தது 'பள்ளியிறுதித் தேர்வில் வெற்றி பெறுவேன்; நிறைய மதிப்பெண்கள் பெறுவேன். பொதுக்கணக்கில் நூற்றுக்கு நூறு பெறாவிட்டாலும் தொண்ணுறுக்குமேல் பெறுவேன்'. இப்படி என்னை எடைபோட்டார்கள், என் வகுப்பு மாணவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/204&oldid=786996" இலிருந்து மீள்விக்கப்பட்டது