பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 167 பாட்டியோடு, தசாவதாரம் பார்க்கச் சென்னைக்குச் சென்றபோது, என்னை அச்சம் ஆட்கொண்டிருந்தது. இரயிலில் நெரிசலும் அதிகம். ஆகவே அதிகம் வேடிக்கை பார்க்கவில்லை. தந்தையோடு சென்றது, புரை தீர்ந்த பயணமாகத் தோன்றிற்று. வழிநெடுகிலும் வேடிக்கை பார்ப்பதில் மூழ்கியிருந்தேன். செங்கற்பட்டு சந்திப்பிற்கு முன்பு, ஆத்தூர் மடுவைக்கண்டு மலைத்துப் போனேன். அவ்வளவு ஆழமான மடுவை அதுவரை நான் கண்டதில்லை. அத்திகைப்பு மாறுவதற்குள் சந்திப்பு வந்துவிட்டது. குளவாய் ஏரி கண்ணுக்கெட்டும் மட்டும் பரந்து கிடந்தது. அவ்வளவு பெரிய ஏரியையும் நான் முன்னர்க் கண்டதில்லை. அதைக் கண்டபோது அச்சம் கெளவிற்று. ஏரி என்ன, மேலே வந்தா விழுங்கிவிடப் போகிறது! இது, முதல் முறை கண்டபோது புரிய வில்லை. செங்கற்பட்டு சந்திப்பில் காத்திருக்கையில் பழைய நினைவு மின்னிற்று. நான் சிறு பையனாக இருந்தபோது, என் குலதெய்வமான முருகப் பெருமானுக்கு முடி காணிக்கை கொடுக்கத் திருத்தணிக்கு அப்பாவோடும் பாட்டியோடும் போய் வந்தேன். அரக்கோணம் சந்திப்பில் வேலூர் துரைசாமி முதலியாரைக் கண்டோம். அவர் என் கையில் ஐந்து ரூபாய் நோட்டைக் கொடுத்து வாழ்த்தினார். கூடுவாஞ்சேரியில், நீர்மோர் விற்பனை பலமாக இருந்ததைக் கண்டேன். -- இடிபடாமல், எதையும் இழக்காமல் பாதுகாப்பாக, சென்னை எழும்பூர் சென்றடைந்தோம். அருகில் ஒடிய டிராம் வண்டியில் ஏறினோம். மேலே துண்டு மட்டும் போட்டுக் கொண்டிருந்த என்தந்தையைப் பார்த்து, 'உடம்பை மூடிக் கொள்ளுங்கள் என்று நடத்துநர் கூறினார். அதில் அதிகாரம் தொனிக்கவில்லை. அக்காலத்தில், பேருந்திலோ, டிராமிலோ பயணஞ் செய்வோர், உடம்பை மூடிக் கொள்ள வேண்டுமென்பது மரபு. அதன்படி நடந்தார், என் தந்தை. ஆசிரியமணி பண்டிதர் எஸ்.எஸ். அருணகிரிநாதர் பூக்கடையண்டை இறங்கி, தங்கசாலைக்கு அருகில் குடியிருந்த பண்டிதர் எஸ்.எஸ். அருணகிரிநாதர் வீட்டிற்குச் சென்றோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/209&oldid=787001" இலிருந்து மீள்விக்கப்பட்டது