பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 நினைவு அலைகள் 'இடம் கிடைக்கலாமென்று தெரிந்தால் பக்கத்திலுள்ள விக்டோரியா விடுதியைப் பார்ப்போம். 'இரண்டும் பொருந்தினால் நன்றாகப் போய்விடும். இல்லையென்றால் மேற்கொண்டு யோசிப்போம். 'இப்போதைக்குக் கிறுத்துவக் கல்லூரி இடத்தை விட்டுவிட வேண்டாம்' இது முடிவு. மாநிலக் கல்லூரி இம்முடிவைக் கேட்டதும் பூரித்தேன். மூவரும் என்னை அழைத்துக் கொண்டு திருவல்லிக்கேணிக்குச் சென்றார்கள். அப்போது பேருந்தில் போனோம். அன்று அரசால் நடத்தப்பட்ட பேருந்துகள் இல்லை. தனியார் நடத்திய பேருந்துகளே இருந்தன. பாரிமுனையில் இருந்து திருவல்லிக்கேணி முனைவரை செல்வதற்குள் பலமுறை நிறுத்தி நிறுத்திப் பயணிகளைத் தேடுவதில் நிறையத் தாமதஞ் செய்தனர். சலிப்போடு விக்டோரியா விடுதிக்கு அடுத்த பாலத்தண்டை இறங்கினோம். நடந்து சென்று மாநிலக் கல்லூரிக்குள் நுழைந்தோம். கல்லூரி வளைவு பூராவும் சிறு சிறு கூட்டங்கள். இளைஞர்களாகவே சிலர்; பெரியவர்களோடு வந்த இளைஞர்கள் பலர் இங்கும் அங்கும்: கட்டடத்திற்குள் நுழைந்தோம். அடுத்தடுத்துக் காத்திருப்போர் குழுக்கள். எவரும் உரத்துப் பேசவில்லை. எவரும் மிரட்டவில்லை. 'ஏன் இங்கே கூட்டம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? கலைந்து போங்கள் என்று வீணாகக் கெடுபிடி பண்ணவும் யாருமில்லை. கல்லூரி அலுவலகத்தில் உள்ளோர் பூசாரிகள்போல் முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டிருந்தார்கள். அண்டிக் கேட்கவே பலருக்கு நா எழவில்லை. மிடுக்கான மேனாட்டு உடையில் இருந்த இரண்டொருவர் தலைமை எழுத்தரை அன்று அதுவே அலுவலகத்தில் பெரிய பதவி நெருங்கி இடம் கிடைப்பதைப் பற்றிக் கேட்டார்கள். 'முதல்வர் முடிவு செய்ததும் தாமதம் இல்லாமல் கடிதம் அனுப்புவோம். இடம் கிடைத்தவர்களுக்கு மட்டுமே கடிதம் வரும். கடிதம் வராவிட்டால் இடம் இல்லை என்று பொருள்' என்று குளுமையாகப் பதில் கிடைத்தது. H மாநிலக் கல்லூரியின் மாடியிலிருந்து சாளரத்தின் வழியே பார்த்தேன். வங்காள விரிகுடா பரந்து கிடந்தது. அலை எழுந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/212&oldid=787005" இலிருந்து மீள்விக்கப்பட்டது