பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு TBT நெஞ்சை நெகிழ வைத்த இந்நிகழ்ச்சி இன்றும் பசுமையாக என்னுள் இருந்து, வகுப்பு வாதக் காற்றிலிருந்து என்னைக் கவனமாகக் காத்து வருகிறது. கல்லூரியில் முதல் நாள் விடுதி அறையின் தரை, கடப்பைக் கல்லால் ஆனது. குளிர்காலத்தில் அத்தரையின் மேல் படுப்பது, நோய்க்கு இடம் ஆகும் என்று பெரியவர்கள் நினைத்தார்கள். - எனவே, மடிப்புக் கட்டில் ஒன்று வாங்கிக் கொடுத்தார்கள். மெத்தை இல்லை. சமுக்காளம் வாங்கிக்கொண்டேன். தலையணையோடு, துப்பட்டியொன்றும் வாங்கிக்கொண்டேன். சோப்பு, சீப்பு, கண்ணாடி, பல்பசை, பல்குச்சி ஆகிய சில்லறைப் பொருள்களை வாங்கினேன். இத்தனையும் வைக்க, தகரப்பெட்டியும் பூட்டும் வாங்கப்பட்டன. உரிய நாளில் விடுதிக்குக் குடியேறினேன். அப்போது, அப்பாவும் மாமாவும் விருந்தாளிகளாக வந்திருந்தார்கள். அடுத்த நாள் கல்லூரி தொடங்கிற்று. முன்பின் பழக்கமில்லாத மேல்நாட்டு உடையில் முதன்முதல் கல்லூரிக்குச் சென்றேன். உடையும் புதிது. காலணியும் புதுவகை. விடுதியிலிருந்து கல்லூரிக்குப் போகும்போது, என்நடை என்வசம் இல்லை. நான் ஒன்று நினைக்க பூட்ஸ் கால் வேறொரு பக்கம் இழுக்கும். சறுக்கி வீழ்ந்துவிடுவேனோ என்று அஞ்சினேன். அச்சம் பல நாள் தொடர்ந்தது. H எனக்கு மேல் வகுப்பில் படித்து வந்த திரு எம்.டி.இராசு என்னைக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றார். பொது அறிவுப் பலகையிடம் இட்டுக் கொண்டு போனார். அன்று என் பிரிவிற்கு என்னென்ன பாடங்கள் நடக்குமென்பதைச் சுட்டிக் காட்டினார். முதல் பாடம் நடக்கும் வகுப்பிற்கு அழைத்துக் கொண்டு போனார். அங்கே விட்டுவிட்டு, தம் வகுப்பிற்குச் சென்றார். ஆங்கிலப் பேராசிரியர் அரங்கநாதன் அது ஆங்கில வகுப்பு. உயர்ந்த விரிந்த மேடையில் ஆசிரியருக்கு நாற்காலி இருந்தது. மாணவர்கள் காலரி'யில் அமர்வோம். முன்னே வந்து நிற்பதில் எனக்குக் கூச்சம் அதிகம். எனவே நான்காவது வரிசையில், முதல் இடத்தைப் பிடித்துக் கொண்டேன். கூத்தாட்டு அவையில் கூடுவது போல், தனித்தனியேயும், இணை இணையாகவும் சகமானவர்கள் வந்து சேர்ந்தார்கள். அத்தனை பேர்களும் ஆண்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/223&oldid=787017" இலிருந்து மீள்விக்கப்பட்டது