பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 நினைவு அலைகள் மயிலை மகாவித்வான் சண்முகம் பிள்ளை இடம் பதின்மூன்று ஆண்டுகள் முறையாக இலக்கணம் இலக்கியங்களைக் கற்றுத் தேறினார். இத்தனை நெடுங்காலம், சென்னையின் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடிக்கு நடந்து சென்று தமிழ் கற்ற உறுதிப்பாடு பலருக்கும் வந்தால் மிகவும் நன்றாயிருக்கும். பின்னர், புனித சேவியர் உயர்நிலைப் பள்ளியிலும், வடசென்னை நார்த் விக் பெண்கள் பள்ளியிலும், வேப்பேரி புனித பால் உயர்நிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராகத் தொண்டாற்றினார். மேரி இராணி பெண்கள் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்படி நமச்சிவாயர் விரும்பி அழைக்கப்பட்டார். அக்கல்லூரியைத் தொடங்கியபோது, அதற்கு எதிர்ப்பு எழுந்தது. பெண்களுக்கு உயர்கல்வி எதற்கு என்று பலர் எதிர்த்தனர். பழமை விரும்பிகள் எழுப்பிய எதிர்ப்புப் புழுதிக்கிடையில், தொடங்கும் கல்லூரியில், சென்னை நகரில் பலருக்கும் தெரிந்த நமச்சிவாயர், ஆசிரியராவது எதிர்ப்பைக் குறைக்க உதவும் என்று எண்ணியது அரசு. எனவே, பதவி அவரைத் தேடிச் சென்றது; ஆயினும் கட்டைச் சம்பளமே. பின் எப்படிப் பணம் சேர்ந்தது? கார் வாங்க முடிந்தது? நேர்மையான வழியில்தான் வருவாய் மிகுந்தது. ஊர் அறிய, முறையாகவே நிறையச் சம்பாதித்தார். அது என்ன வழி? அறியாமை அடிமைப்படுத்தும் கொடிது, கொடிது வறுமை கொடிது. அதைப் போலவே கொடிது கொடிது அடிமை கொடிது. - அடிமைத்தனம் எங்கோ தொடங்கும்; எப்படியோ தொடங்கும்: ஆரவாரமின்றித் தொடங்கும்; பெரும் நன்மை போன்றே தோன்றும். ஏமாறினால் ஏற்றுக் கொண்டால்? எங்கெங்கோபரவும்; ஆளையே மாய்க்கும்; நாட்டையே நடைப்பினமாக்கும். பெரிய உடம்பில், சின்னஞ்சிறு காயம். இவ்வளவு தானே என்று இருந்துவிட்டால்? சீழ்பிடிக்கும். அது காயம் பட்ட இடத்தோடு நிற்காது. நமக்குத் தெரியாமலே உடம்பில் ஊடுருவி விடும். கையையோ காலையோ வெட்டி எடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளும். சிலவேளைகளில் உயிரையே கொள்ளை கொண்டுவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/228&oldid=787022" இலிருந்து மீள்விக்கப்பட்டது