பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 நினைவு அலைகள் ஆத்திகமும் நாத்திகமும் தமிழ் வகுப்பில், பொது அறிவு நேரத்தில், என் நண்பர் ஒருவர் எழுந்து நின்றார். தங்கு தடையின்றி நான்கு நீண்ட தமிழ்ச் சொற்றொடர்களை ஒப்புவித்தார். ஒப்புவித்துவிட்டு, 'ஐயா! இவ்வாதம் சரியில்லையா? இதை ஏற்றுக் கொள்வதற்கு தயக்கம் ஏன்?' என்று கேட்டார், அம்மாணவர். நல்லாசிரியர் நமச்சிவாயர் வாதத்தையும் கேள்வியையும் அமைதியாகக் கேட்டார்; மனம் கோணவில்லை; முகம் சுளிக்கவில்லை. கேள்வி முடிந்ததும், 'உட்காரு அம்மா' என்ற இனிய குரலில் கட்டளையிட்டார். கேள்வி கேட்டது பெண் அல்ல; ஆண்மகன்; நன்றாக வளர்ந்த ஆண் மகன், அவரை 'அம்மா' என்று அழைத்தது மேரி இராணிக் கல்லூரிப் பழக்கத்தால் அல்ல. இது, அந்தக்கால சென்னைப்பட்டினத்துப் பழககம. - அக்காலத்தில், சென்னையில் வாழ்ந்தோர், எவரையும் கனிவோடு அழைக்க எண்ணினால் 'அம்மா' என்றே அழைப்பார்கள். அந்தப் பழக்கப்படி நமச்சிவாயர் மாணவரைச் செல்லமாக அம்மா என்று அழைத்தார். மாணவர், ஆசிரியரின் ஆணைப்படி அமர்ந்தார். நமச்சிவாயரும் உரைநடையில், ஐந்தாறு சொற்றொடர்களை ஒப்புவித்தார். மாணவர் கூறியதற்குப் போட்டியாக அல்ல; பதிலாக அல்ல; தொடர்பாக, அதே போக்கில் அமைந்தவற்றைக் கூறினார். கூறிவிட்டு, 'இராமசாமி! நீ ஒப்புவித்தது, கர்னல் இங்கர்சால் என்னும் அமெரிக்க நாத்திகரின் ஆங்கில உரையின் சிறு பகுதி. நான் கூறியதும் அதே உரையின் சிறு பகுதி, நீகூறியதன் தொடர்பகுதி. 'இந்தக் கடவுள் மறுப்பு உரை, நெடுநாள்களுக்கு முன்னர் ஆங்கில நூல் வடிவில் வெளிவந்தது. அதில் ஒரு பகுதியைத் தமிழ்ப்படுத்தி, இவ்வாரக் குடியரசு வெளியிட்டுள்ளது. 'அதைப் படித்துவிட்டு, சில சொற்றொடர்களை மட்டும் மனப்பாடஞ் செய்து ஒப்புவித்தாய். நானும் அவ்விதழைப் படித்தேன்; உன்னிலும் அதிகமாகச் சில சொற்றொடர்களை நினைவில் வைத்துக் கொண்டு, இப்போது உனக்குச் சொன்னேன். 'இங்கர்சாலின் கருத்துகளை அடக்கிய இந்நூல், சென்னை கன்னிமாரா நூல்நிலையத்தில் இருக்கிறது. மூல நூலையே எடுத்துப்படி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/236&oldid=787032" இலிருந்து மீள்விக்கப்பட்டது