பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 நினைவு அலைகள் அவ்விழப்பால், அவர்களைவிட அவர்கள் குடும்பங்களைவிட சமுதாயமே பெரிதும் பாதிக்கப்படும். மேயர் இராமசாமி நல்லாசிரியர் நமச்சிவாயர், இராமசாமியை நசுக்கி வைக்காமல் நல்வழிப்படுத்தியதால், அவர் வளர்ந்தார். குடும்பத்தில் ஏற்பட்ட சூழ்நிலைமாற்றத்தால், இன்டர்மீடியட் டோடு, கல்லூரிப் படிப்பை நிறுத்த நேர்ந்தது. ஆயினும் தொழில்துறையில் வளர்ந்தார்; பொதுவாழ்வில் சென்னை நகர வுெ ரீபாக வந்தார்; சென்னை மாநகர் ஆட்சியின் மேயராக உயர்ந்தார். அலுவலர்களும் உறுப்பினர்களும் மதிக்குமளவு நற்பணி யாற்றினார். அண்ணாமலை பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராகி நல்ல முறையில் கல்வித்தொண்டு ஆற்றினார். எந்த நிலையிலும் பொது அமைப்புகளில் இருந்து எதையும் எடுத்துக் கொண்டு போகவில்லை. பொதுத்தொண்டைக் காசு பணமாக்கிக் கொள்ளாமலே வாழ்ந்து மறைந்தார். தமிழ்ப் பண்டிதர் நமச்சிவாயர், தமிழை மட்டும் படிக்கவில்லை; அறிவுப் பெருக்கத்திற்காக ஆங்கிலத்தையும் ஆழ்ந்து படித்தார். அப்படிப் படிக்கையிலும் தம் சமய உணர்விற்கு ஆதரவானவற்றை மட்டும் படித்துவிட்டு, பிறவற்றை வேண்டாமென்று ஒதுக்கிவிடவில்லை. ஆழ்ந்த ஆத்திகராகிய அவர், நாத்திக வாதத்தில் சுடர்விட்ட சிறந்த நூலையும் ஊன்றிப் படித்தார். சிக்கினவர்களிடம் எல்லாம், சமயம் வாய்க்கும் போதெல்லாம் தம்முடைய கருத்துக்களைத் திணிக்காமல், ஒவ்வொருவருடைய சிந்தனையையும் மதித்தார்; அதைத் தூண்டி வளர்த்தார். இவரைப் பலரும் பின்பற்றினால் மிகவும் நன்றாயிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/240&oldid=787037" இலிருந்து மீள்விக்கப்பட்டது