பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 203 வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அழுகிறோமே என்று நாட்டிலுள்ள வளர்முக வாய்ப்புக் கூறுகளை நினைந்து நினைந்து, பல சமயங்கள் சோகத்தில் ஆழ்வதுண்டு. மரம் உயிரோடிருக்கும் மட்டும் வசந்தத்தின் துளிர்களையும் மலர்களையும் நிச்சயம் காண்போம் என்னும் நம்பிக்கைக்கு இடமுண்டு. நம் சமுதாயம் வாழும் வரை, மக்களே முன் வந்து மலர்ந்து மணம் பரப்பி, கைகொடுத்துச் சமுதாயத்தை உயர்த்திவிடுவார்கள் என்னும் நம்பிக்கை, அவா என்னுள் அடிக்கடி எழுந்து அமைதிப்படுத்துவ துண்டு. விக்டோரியா விடுதி ஆண்டுவிழா அண்மையில் ஒரு நிகழ்ச்சி. அவ்வேளை மின்னலினும் விரைந்து என் சிந்தனைகள் மின்னின ஒலியினும் விரைவாகப் பற்ந்தன. அதைப் பங்கிட்டுக் கொள்வது என் கடமை. 1978ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் நாள் சென்னை விக்டோரியா மாணவர் விடுதியின் ஆண்டுவிழா. 1928 ஜூலைத் திங்களில் பதினாறு வயதுப் பையனாக அவ்விடுதியில் சேர்ந்தேன். அதன் பொன் விழாவைக் கொண்டாடுவதுபோல்- அதை அறியாமலே - என்னை இவ்வாண்டு நிறைவு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள். நானும் ஏற்றுக் கொண்டேன். * அன்று மாலை வழக்கம்போல் உண்டாட்டு. அது முடிந்ததும் மாநிலக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜா. இராமச்சந்திரன், விடுதிக் காப்பாளர் பேராசிரியர் சரவணன், மாணவத் தலைவர்கள் ஆகியோரோடு என்னை மேடை ஏறச் செய்தார்கள். மாணவப் பருவத்தில் பெஞ்சின்மேல் நிற்காததற்குத் தண்டனையோ, விழா தொடங்கிற்று. ஆண்டறிக்கை படிக்கப்பட்டது. அதில் இவ்விடுதி எப்படித் தோன்றிற்று என்பது தொட்டுக் காட்டப்பட்டது. செவி கூர்மை ஆயிற்று. சென்னை மாநிலக் கல்லூரியில் 1884 ஆம் ஆண்டு முதல் 1893ஆம் ஆண்டுவரை பூண்டி அரங்கநாத முதலியார் என்பவர் பேராசிரியராக விளங்கினார். அவர் கணக்குப் பாடமும் தத்துவப் பாடமும் கற்பித்து வந்தார். ஆங்கிலத்திலும் தமிழிலும் புலமை பெற்றார். மாணவர்கள் நெஞ்சிலும் நிலையாக இடம் பெற்றிருந்தார். மறைந்த இப்பேராசிரியரின் அருந்தொண்டை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றை அமைக்க, சென்னை விக்டோரியா பொது மண்டபத்தில் கூடிய பொதுமக்கள் முடிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/245&oldid=787042" இலிருந்து மீள்விக்கப்பட்டது