பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 நினைவு அலைகள் செய்தார்கள். மாணவர் விடுதியே அவருக்குப் பொருத்தமான நினைவுச் சின்னம் என்று முடிவெடுத்தார்கள். அக்கால ஆளுநரின் நிர்வாக சபையில் நிதிப் பொறுப்பேற்றிருந்த திரு. பிலிப்ஸ் என்பவர் தலைமையில் ஒரு செயற்குழு அமைக்கப் படடது. திரு. ஸ்டுவர்ட் என்ற வெள்ளையரும் திரு. வீரராகவாச்சாரியார் என்ற தமிழரும் செயலாளர்களாக இருந்தனர். அக்காலத்திலேயே ரூபா 75000 நிதி திரண்டது. விக்டோரியா மாணவர் விடுதி உயர்ந்து எழும்பிற்று. இச்செய்தியை என் காதுகள் கேட்டன. முற்காலத் தமிழர்கள் நன்றி பாராட்டத் தெரிந்தவர்கள் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே! இக்காலத் தமிழரும் நன்றியுடையவர்கள்! சிந்தனையோ பறந்து சென்றது. 4-12-77 அன்றைய மாலைக்குப் பாய்ந்தது. சென்னை இராஜாஜி மண்டப மேடைக்குச் சென்றது. ஆம்: அன்று தமிழகக் கல்வித்துறையின் நூற்றைம்பதாவது ஆண்டுவிழா என்ற பெயரில் நடந்த விழாவை நினைத்துக் கொண்டது. இன்றையக் கல்வி அமைச்சர் மாண்புமிகு அரங்கநாயகத்தின் அறவுணர்வின் விளைவாக என்னைப் போன்ற ஒய்வு பெற்ற இயக்குநர்களுக்கும் - பழஞ் சோறுகளுக்கும் - இடம் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தது. 'மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு ' என்று அறிஞர் அண்ணா கற்றுத்தந்த பாடத்தை நடைமுறைப்படுத்த முயலும் பண்பினை எண்ணிப் பாராட்டிற்று. 'கல்வித் துறையில் , இனையில்லாத சிறப்பான பணியாற்றித் தமக்கெனத் தனியிடம் பிடித்துக் கொண்டவர் நெ.து. சுந்தரவடிவேலு ' என்று தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு மனோகரன் மனம்விட்டுப் பாராட்டியது நினைவில் மின்னித் தெம்பு ஊட்டியது. 'பள்ளிக்குச் செல்லும் எல்லா மாணவ மாணவிகளும் கட்டாயமாகச் சீருடையில் செல்ல வேண்டும். 'அது ஏழை பணக்காரர் என்னும் வேற்றுமை உணர்ச்சியைக் குறைக்க உதவும். சீருடை இயக்கத்தை நான் தொடக்கத்தில் இருந்து ஆதரிப்பவன். 'பல ஆண்டுகளுக்கு முன்பே நான் நடத்தி வந்த இராஜேஸ்வரி பள்ளிக்கு அப்போதைய கல்வி அமைச்சர் மாண்பு மிகு சி. சுப் பிர மணியத்தையும் இயக்குநர் நெ.து. சுந்தரவடிவேலுவையும் அழைத்துச் சீருடை வழங்க ஏற்பாடு செய்தேன்' என்று விழாத் தலைமையேற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/246&oldid=787044" இலிருந்து மீள்விக்கப்பட்டது