பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 2O7 ஏனையோர் எண்ணிக்கை பெரிது. எனவே விடுதி நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆங்கில மொழிவழி நடந்தன. தமிழ் முழங்கும் இக்கால விடுதியின் நிலை என்ன? விடுதியில் தங்கியுள்ளோர் அநேகமாக எல்லோருமே தமிழர்கள். இந்தியா விடுதலை பெற்று, மொழிவழி மாநிலங்களை அமைத்துக் கொண்டதன் விளைவு, விக்டோரியா விடுதி, தமிழர் விடுதியாகிவிட்டது. இதை அறிந்து மேலும் ஆய்ந்தேன். நான் தங்கியிருந்த காலத்தில் எல்லோருமே தங்கள் பணத்தைச் செலவிட்டுக்கொண்டு விடுதியில் இருந்தார்கள். எவருக்கும் அரசிடமிருந்து உதவிப் பணம் கிடையாது. நிறைய மதிப்பெண்கள் பெற்ற திறமைசாலிகள் என்ற சாக்கிலும் எவரும் உதவிப்பணம் பெறவில்லை. தலைமுறை தலைமுறைகளாக அழுத்தி வைக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்டோர், பின்தங்கிய வகுப்பினர்கள் என்று சொல்லியும் எவருக்கும் விடுதிப்பணம் கொடுக்கவில்லை. o எனவே சொந்தத்தில் வசதி பெற்றவர்களே, கல்லூரிக்கு வந்தார்கள்: விடுதிகளில் தங்கினார்கள். t ஒரே வேளை, யாரோ ஒரு செல்வர், வள்ளலாகி, நிதியுதவி செய்ய, அதைக்கொண்டு கல்லூரியில் சேர்ந்திருந்தவர்கள் சிலரே ஆவார். என் கால விக்டோரியா மாணவர் விடுதியில் தங்கியிருந்தவர்களில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடி இளைஞர் எவரும் இல்லை. சாதிப்பட்டியல்படி பின் தங்கியவர்களாகிய சிலர் இருந்தனர். அவர்கள் சாதியில் பின்தங்கியிருப்பினும் பண வசதியில் முன்னேறியிருந்தவர்கள் வீட்டுப் பிள்ளைகள். கல்லூரி மாணவர் சமுதாயத்தின் நிலை எப்படி? மூன்றே மூன்று ஆதிதிராவிட மாணவர்கள் அன்று, சென்னை மாநிலக் கல்லூரியில் மூன்றே மூன்று ஆதிதிராவிட மாணவர்கள் பயின்றார்கள். ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் படித்த பெரிய கல்லூரியில் ஆதிதிராவிட மாணவர்கள் எண்ணிக்கை மூன்றே மூன்றுதான். எவ்வளவு பெரிய சமுதாயக் கொடுமை! இம் மூன்று ஆதிதிராவிட மாணவர்கள் ஏழைகளா? இல்லை. ஆதிதிராவிட சாதியில் பிறந்துவிட்ட, பணமுடை இல்லாத குடும்பத்தவர்கள். ஒருவர், ஆதிதிராவிட மக்களின் காவலர்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/249&oldid=787050" இலிருந்து மீள்விக்கப்பட்டது