பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 213 இரத்தத்தில் கலந்த அடிமைப் புத்தி 'பழக்கம் கொடியது பார்: பாறையாயினும் கோழி கிழிக்கும் என்னும் மின்னல் வெட்டிற்று. தாழ்த்தப்பட்ட இளைஞர்களின் கவனத்தைச் சிதைக்கும் கொடிய பழக்கம் எது? அவர்களின் கல்விக்கு வேர்ப்புழுவாகச் செயல்படும் தீய பழக்கம் எது? அடியாட்களாகச் செயல்படும் பொல்லாத பழக்கம். மற்றவர்களுக்கு அடியாட்களாகச் சென்று, உறவினர் மண்டைகளை உடைத்துக் கொண்டு, அல்லல் படும் அவலப் பழக்கம். -- புகைதலும் பகைத்தலும் நமக்குப் புதிதல்ல; நம்மை மிஞ்சப் போட்டியிடுவோர் மேல புகைதல், மன்னிக்கக்கூடிய வலிவின்மை, தன் வரையில் அடங்கி வாழும் பங்காளியின் மேலும் பாய்ந்து பிடுங்குதல் மானுடத்தின் காய்ச்சல்; தமிழர்களின் தனியுடைமை. எனவே, தலைமுறை தலைமுறைகளாக, அண்ணன் மிராசுதாரும் தம்பி மிராசுதாரும் கொடும் பகைவர்களாக இயங்குவார்கள். ஒருவரை ஒருவர் கவிழ்க்க, விழுங்கச் சதி செய்வார்கள்; திட்டந் தீட்டுவார்கள்; அவர்களுக்குச் சூழ்ச்சி சொல்ல, 'கெட்டிக்காரர்கள் சேர்வார்கள். கடைசியில் அண்ணனுக்கும் தம்பிக்கும் சண்டை மூளும். ஆனால், அண்ணனும் திண்ணையை விட்டு இறங்க மாட்டார்; தம்பியும் திண்ணையைவிட்டு விலக மாட்டார். இருவர் மேலும் அடி விழாது; து.ாசி படியாது. இருவரையும் முடுக்கிவிடும் கெட்டிக்காரர்கள் நிலையும் அதுவாகவே இருக்கும். இவர்கள் உடம்பு நோகாமல் சண்டை யிடுவார்கள். ஆனால்? இருதரப்புப் பண்ணை ஆள்களுக்கும் ஆணை பறக்கும். எத்தனையோ நூறு ஆண்டுகளாகக் கீழ்ப்படிந்தே வந்தவர்கள் ஆயிற்றே அவர்கள்! நொடியில் எதிர் எதிர் அணிகளாக நிற்பார்கள். கம்பும் கழியும் கத்தியும் கடப்பாரையும் பிடித்து நிற்பார்கள்; சவால் விடுவார்கள், பாய்வார்கள்; மோதுவார்கள்; உடைப்பார்கள். மண்டையோ, கையோ, காலோ உடைய வீழ்வார்கள். ஏழைபங்காளிகள், தம் கண்ணையோ, காதையோ, கையையோ இழப்பார்கள். எந்த அணியினர் செத்தாலும் தனிச்சுடுகாடே. மிராசுதார்கள் செத்தால் சுடும் சுடுகாட்டிற்கு மற்ற எந்த வீரரையும் கொண்டு போக முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/255&oldid=787057" இலிருந்து மீள்விக்கப்பட்டது