பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22O நினைவு அலைகள் நண்பர்களின் திருக்கூட்டம் கோவையிலிருந்து திரு என். சின்னசாமி, திரு இராமகிருஷ்ணன் என்ற இருவர் மாநிலக் கல்லூரியில் பி.ஏ. ஆனர்ஸ் (கணக்கு) படிக்க வந்தார்கள். இருவரும் கோவையிலேயே இண்டர்மீடியட் வகுப்பை முடித்தவர்கள். அன்று கோவையில் வெறும் பட்டப் படிப்பிற்கும் வாய்ப்பில்லை. அன்று அரசினர் கல்லூரி மட்டுமே கோவைநகரில் இருந்தது. அதுவும் இரண்டாம் நிலைக் கல்லூரி. எனவே, மேற்படிப்பிற்குச் சென்னைக்கோ, திருச்சிக்கோ, மதுரைக்கோ செல்ல வேண்டும். இவ்விருவரும் சென்னை மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார்கள். அந்தக் காலத்தில் பார்ப்பனரல்லாத இளைஞர்கள் கணக்கு ஆனர்ஸ் படிப்பது அரிது; வியப்புக்குரியது. சாதாரணக் குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள், அரிய அப்படிப்பினை மேற்கொண்டதால் பலருடைய பாராட்டுக்கும் பாத்திரமானவர்கள். இருவரும் எளிதாகப் பழகும் இயல்பினர்கள்; கள்ளங்கபடமில்லாதவர்கள்; வீட்டுக் கணக்குப் பயிற்சிக்கு, இவர்கள் இருவருடைய உதவியையும் அடிக்கடிப் பெற்றிருக்கிறேன். 'தம்பி உள்ளான் படைக்கஞ்சான், அண்ணன் உள்ளான் கற்க அஞ்சான்' என்பது போல் இருந்தது என் நிலை. 'போட்டி நிறைந்த கல்வி உலகில், தாங்கள் படித்து முன்னேறுவதிலேயே முனைப்பாயிருப்பார்கள்' என்று என் தந்தை அஞ்சியது வீண். மாணவப் பருவத்தில் நான் பெற்ற செல்வங்களில் எல்லாம் தலையாய செல்வம் நட்புச் செல்வம் ஆகும். நான் கல்லூரியில் கால் எடுத்து வைக்கும்போது, நான்கு அடி ஏழு அங்குல உயரமே இருந்தேன். கிட்டத் தட்ட அதே உயரம் உள்ள இரண்டொருவரும் என் வகுப்பிலிருந்தார்கள். எனினும் என்னையே எல்லோரும் பொடி' என்று அழைக்கத் தொடங்கினார்கள். கல்லூரியிலும் விடுதியிலும் இப்படிக் கிண்டலாக அழைப்பார்கள். இது சில நாள்கள் எரிச்சல் ஊட்டியது. வேறு வழியின்றிப் பொறுத்துக் கொண்டது நல்லதாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/262&oldid=787065" இலிருந்து மீள்விக்கப்பட்டது