பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 நினைவு அலைகள் அவர் படிப்பில் சூடம். கல்லூரிக்கு வரும்போதே மகாத்மா காந்தியிடம் பற்றுக் கொண்டவர். கறவை மாடுகளின் கன்றுகளைக் கொன்றுவிட்டு, அத்தோல் உறை யில் வைக்கோலை அடைத்து வைத்து, பசுக்களையும் எருமைகளையும் ஏமாற்றிப் பால் கறப்பது அக்காலச் சென்னையின் தனிச் சிறப்பு. இக்கொடுமையைக் காணச் சகியாத அளகேசன் விடுதியில் பால் அருந்துவதை விட்டுவிட்டார். அவ்வளவு இளகிய மனத்தினராக இருந்தார். --- நான் கல்லூரியிலும் விடுதியிலும் சேர்ந்தபோது, திரு. சி. சுப்பிரமணியம் பி.ஏ. வகுப்பிற்காக மாநிலக் கல்லூரியில் சேர்ந்தார். என்னோடு விக்டோரியா விடுதியில் இருந்தார். எனக்கு ஈராண்டு மூத்தவராகிய அவரிடம் நான் அடக்கத்தோடு பழகத் தொடங்கினேன். அவர், இளையன் என்று என்னை அலட்சியப்படுத்தவில்லை. என்னை அன்பனாகவே ஏற்றுக் கொண்டார். திண்டுக்கல் பி.வி. தாஸ், கோவில் பட்டி நா. சீனிவாசன், சத்தியமங்கலம் வையாபுரி ஆகியோர் திரு. சி. சுப்பிரமணியத்திற்கும் மேல் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் அனைவரும் ஒரே திருக்கூட்டம்; காந்தியவாதிகள். திரு.பெரியசாமித்துரன், இன்டர் மீடியட்டில் இரண்டாம் வகுப்பில் இருக்கையில் நான் சேர்ந்தேன். இவரும் விக்டோரியா விடுதியில் இருந்தார். என்னைத் தம்பியாக அன்புடன் ஏற்றுக் கொண்டார். திரு.கு.சு. பெரியசாமி என் வகுப்பு மாணவர். இனிய நண்பர். திரு.ஆயண்ணன் என்னும் மற்றொருவர் என்னோடு ஒரே வகுப்பில் படித்தார். இருவரும் ஈரோடு வட்டத்தைச்சேர்ந்தவர்கள். திருவாளர்கள் இராமலிங்கம், விவேகானந்தம், வேணுகோபால் என்பவர்களும் என்னோடு படித்தார்கள். என்னோடு விடுதியில் தங்கியிருந்தார்கள். நாங்கள் அனைவரும் ஒரே குழு. அதிலும் எனக்கு மூத்தவர்களாகிய திருவாளர்கள் தாஸ், சீனிவாசன், சி. சுப்பிரமணியம், பெரியசாமித் தூரன் ஆகியவர்களின் நிழல்போல இருப்பேன். அவர்கள் திருக்கூட்டத்தில் நான் சேரும்போது, அவர்கள் அனைவரும் கதர் அணிபவர்கள். நான் அன்னியத் துணியை அணிந்தவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/264&oldid=787067" இலிருந்து மீள்விக்கப்பட்டது