பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெ. து. சுந்தகவடிவேலு 229 அவ்விதழுக்குப் பெயரென்ன? அதன் பெயர் பித்தன். அதிர்ச்சி அடையாதீர்கள். சற்றேறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், பொதுவாக இளைஞர்கள், கற்பனை உலகில் மிதக்கவில்லை. மாறாக, இந்தியச் சமுதாய நிலையை நன்கு உணர்ந்து இருந்தார்கள். பித்தன் - பெயர்க் காரணம் ■ எங்கோ காட்டிலே பூத்த பூவைப்போல, தங்கள் சங்கமும் தமிழ்ச் சமுதாயத்தால் பொருட்படுத்தப்படாது ஒதுக்கப்படலாம் என்பதை உணர்ந்தார்கள். சூடிக்கொள்ள எவரும் இல்லாத காட்டிலும், அரும்பும் மலராகத் தவறாது. கவனிப்பார் இல்லாவிட்டாலும், சமுதாயத் தொண்டாற்றுவது பண்பு நிறைந்த மக்கள் கடமை. இதை உணர்ந்தே, தங்கள் அமைப்பிற்கு வனமலர்ச் சங்கம்' என்று பெயர் சூட்டினார்கள். தமிழுக்கு அமுதென்று பேர் என்று மேடையில் முழங்காத அக்காலத்தில், தமிழைப் பேண தமிழில் பேச, தமிழில் எழுத முனைகிற இளவட்டங்களைப் பற்றி நம் சமுதாயத்தின் மதிப்பீடு எனன? 'பித்தர்கள் என்பதே. இதையும் உணர்ந்தவர்கள் வனமலர்ச் சங்கத்தார். உலகத்தின் அலட்சியத்தையும் தூற்றலையும் துணிவோடு ஏற்றுக் கொண்டார்கள். சங்கத்தைக் காட்டுப் பூவாக ஏற்றுக் கொண்டதைப் போல், திங்கள் இதழைப் 'பித்தனாக அழைக்கச் சுணங்கவில்லை. 'பித்தன் மலரின் முதல் இதழ் 1928 (டிசம்பர் மாதம்) விபவ ஆண்டு, கார்த்திகைத் திங்களில் வெளிவந்தது. 'ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்' என்னும் குறிக்கோளைத் தாங்கி மலர்ந்தது. திரு. கா. மு. இராமசாமியை ஆசிரியராகக் கொண்டு, திரு. ம.ப. பெரியசாமியால், வனமலர்ச் சங்கத்திற்காக வெளியிடப்பட்டது. எங்கே அச்சிடப்பட்டது. தொடக்கத்தில் இராயப்பேட்டை சாது அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது. பித்தனின் தரம் என்ன? உயர்வானது. பெரியசாமித் துாரன், * கோதண்டராமன், சா. குருசாமி, பெ. அழகப்பன், ஒ.வி. அளகேசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/271&oldid=787075" இலிருந்து மீள்விக்கப்பட்டது