பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 231 பித்தனின் தொண்டு ச.து.சு. யோகியின் விடுதலை முரசு எவ்வளவு திறமையாகக் கட்சிகளில் சிக்காமல் நடு வழியே நடந்தாலும், 'உள்ளதைச் சொன்னால் உடம்பெரிச்சல் ஏற்படுவது இயற்கை. உள்ளதைச் சொல்லவே பித்தனைத் தொடங்கினார்கள். அதில் வெளியான உண்மை உணர்வுகள், எரிச்சல் ஊட்டாமல் இருக்குமா? 'ஒருவர்க்கடிமை யொருவரென்ற உறுதி ஒழியவே உலகமீதில் யாவருக்கு மொருமை பொழிகவே திருவும் கீர்த்தி கல்வி யாவும் சேர்ந்து விருகவே தெய்வமாதர் தங்களுக்கு அறிவு பெருகவே' என்று சது. சுப்பிரமணியம் பித்தனில் விடுதலை முரசு கொட்டினார். இவ்வரிகள் எழுச்சி ஊட்டின. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் பிரஞ்சு பாலபாடம் கூடப் பித்தன் எழுத்தாளர்க்கு ஆயுதம். பிரஞ்சு பாலபாடம் என்ன சொல்லிற்று? 'ஒரு நாட்டின் மக்கள் யாவரும் சகோதரர்களே' 'பசியையும் தாகத்தையும் பனியையும் தாய்நாட்டிற்காகத் தாங்குவதற்குத் தயாராயிருப்பீர்களாக' மேற்கூறிய இரு கூற்றுகளும் பிரஞ்சு பாலபாடத்தில் இருந்தவை. இவற்றைத் தேடிப் பிடித்துப் பித்தனில் வெளியிட்டால் அதிகார வர்க்கத்தின் கடைக்கண் பார்வை அதன்மேல் விழாதா? இந்தியக் கைத்தொழில் அழிவு இந்தியக் கைத்தொழில்கள் ஆங்கில ஆட்சியால் திட்டமிட்டு அழிக்கப்பட்டன. அதைக்கண்டு சில ஆங்கிலேயர்கள் குமுறினர். அதில் ஒருவர் 'பிரடரிக் ஷோர் என்பவர். ஆங்கில ஆட்சியில் இந்தியப் பொருளாதாரத்திற்கேற்பட்ட நலிவு பற்றிப் பிரடரிக் ஷோர் எழுதினார். 'இந்தியக் கைத்தொழில் அழிவு என்னும் தலைப்பில் பித்தன் வெளியிட்ட தொடர் கட்டுரையின் சிறுபகுதி இதோ: 'இந்திய இயற்கைப் பொருள்கள், பிறந்த இடத்திலேயே பறிமுதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/273&oldid=787077" இலிருந்து மீள்விக்கப்பட்டது