பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 நினைவு அலைகள் சிறிது காலத்தில், வயிற்றுக்கு வேண்டிச் சிறிது தானியமும் அதைச் சமைக்க மட்பானைகளையும் உடுத்தக் கொஞ்சம் மட்டித் துணியுமே உண்டாக்க இந்தியர்களால் முடியும்.' விடுதலை உணர்வு விடுதலை உணர்வு மாந்தர் இனம் முழுவதும் இழையோடும் அடிப்படை உணர்வாகும். அவ்வுணர்வை அழென் முக்கே என்னும் பிரஞ்சுக்காரர் உயிர்த் துடிப்போடு வெளியிட்டார். எங்கோ பால பாடத்திலும் அறிஞர்களின் நூல்களிலும் பதிந்து கிடந்தவற்றை எடுத்துப் போட்டுப் பித்தன் மக்களுக்கு உணர்ச்சி ஊட்டியது. 'நாடு அன்னியர் வசம் ஸ்திரமாய்ப் போய்விடுமானால், பிறகு நாடாவது, குடும்பமாவது உயிரை வேண்டுமென்றால் வைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் நாட்டுக்காவது தனி மனிதனுக்காவது ஒளியிருக்குமா? புகழிருக்குமா? கெளரவமிருக்குமா? தெருவில் திரியும் நாயானது அடிமை நாட்டு மனிதர்களைவிட எண்ணிறந்த மடங்கு மேலல்லவா? 'பிறகு என்றென்றைக்கும் நம் நாட்டில், நாட்டான் கை கீழ், அன்னியன் கை மேல் என்றாய்விடாதா? என்ற அவருடைய உணர்ச்சி மிக்க சொற்களைப் பதியவைத்தது, ஒர் இதழ். இது இளம் உள்ளங்களில் உரிமை வேட்கையை எழுப்பாமல் போகுமா? ஒவ்வோர் வகை உரிமைக்கும் போராடத் தங்களைக் காணிக்கையாக்கிக் கொள்ளும் காளையர்களை உருவாக்கத் தவறுமா? பிரான்சு மக்களாகிய முப்பத்தேழு இலட்சம் பேர்களும் ஒரே பிரான்சுக் குடும்பமாகும். அவர்கள் யாவருக்கும் ஒரே சரித்திரம், ஒரே களிப்பு, ஒரே நோக்கம். 'தங்கள் தாய் நாட்டின் வீழ்ச்சியில் அவர்கள் துன்பமுறுவர்; அதன் வாழ்வில் இன்பமடைவர். நல்லதாயினும் சரி, கெட்டதாயினும் சரி, நாட்டுக்காக அதனை ஏற்றுக் கொள்வர்' என்று ஒரு பிரான்சு பாலபாடம் கூறுகிறது. பிரான்சு பாட புத்தகத்தில் ஒரு பாடல் பின் வருமாறு: 'மகனாயிருந்தெமக்கு மகிழ்வு செய்; ஆனால் யாவினும் முக்கியம் யாதெனின் எவற்றிலும் பெரிதே இன்பப் பிரான்ஸிடை நீ கொள்ளும் அன்பு.' இப்படிப்பட்டவற்றை வெளியிட்டு விடுதலை உணர்வையும் தாய்நாட்டுப் பற்றையும் வளர்த்தது, வனமலர்ச் சங்கத்தின் பித்தன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/274&oldid=787078" இலிருந்து மீள்விக்கப்பட்டது