பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 237 தாழ்த்தியே பார்த்தது. இப்போது, எல்லாத் துறைகளிலும் எல்லாப் பகுதிகளிலும் மக்களின் (த) திராசைப் பொய்த் திராசாக்கி விட்டோம். கள்ளமது விற்போனுக்குப் பணம் மட்டுமல்ல, கனவு கூடக் காணமுடியாத 'மவுசும் வந்துவிட்டது. மதுவிலக்கு இருக்கும்போது, நடமாடும் கள்ள மது, மதுவிலக்கை எடுத்துவிட்டால் நின்றுவிடும் என்பது சரியல்ல. இடைக் காலத்தில், மதுவை விற்க விட்டபோது, கள்ள மது நின்றதா? இல்லை, குறைந்ததா? இல்லை. 'முடிந்தால், யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் குவித்து வைத்துக் கொள்ளலாம் என்னும் பொருளியல் முறை செங்கோல் செலுத்தும்வரை கள்ள வாணிபம், கள்ளிலும் நடக்கும். எனவே, கள்ள மதுவை ஒழிக்க, மது விலக்கைநீக்குவது சரியல்ல. கொள்கை வெளியிலிருந்து, மண்படும் நிலத்திற்கு வருவோம். மதுவிலக்கு நடைமுறைக்கு வருவதற்கு முன்பு, ஏழை மக்களின் நிலை என்ன? குடிகாரர்கள் நடத்திய கொடுமை அப்போது பெரும்பாலான ஏழை எளிய மக்கள் குடிகாரர்கள். அவர்கள் போதையிலிருந்தபோது சும்மாக் கிடந்தார்களா? இல்லை. அநேகமாக நூற்றுக்குத் தொண்ணுாறு ஏழைக் குடும்பப் பெண்கள் அன்றாடம் அடி உதைபட்டார்கள். தள்ளாத பாட்டிகளுக்கும் உதை; குடிகாரனை மனிதனாக மதிக்கும் மனைவிமார்களுக்கும் உதை; பச்சைக் குழந்தைகளும் அடி உதையிலிருந்து தப்பவில்லை. இக்கொடுமை ஒவ்வோர் இரவும் பட்ட நரக வேதனை. அன்றைய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட ஏழைகளின் பொல்லாத சொத்து: தாலிகூட அடகுக் கடைக்குப் போய்விடும்; அதையும் உதைத்தே, கழற்றிக்கொண்டே போவான், குடிகாரக் கணவன். இவை நான் கேள்வியால் தெரிந்து கொண்டதல்ல. நாட்டுப்புறங்களில் நேரடியாகத் தொடர்ந்து பார்த்த பரிதாபங்கள். அலுவல் பார்த்த நாற்பது ஆண்டுகளில் முப்பத்தைந்து ஆண்டுகளின் பெரும்பகுதியைச் சிற்றுார்கள் தொடர்பில் செலவிட்டுப் பெற்ற பட்டறிவையே பகிர்ந்து கொள்ளுகிறேன். ஏன், திருவல்லிக்கேணி குப்பங்களில், இருசப்பக் கிராமணித் தெரு மூலையில் பார்த்துப் பதறிய காட்சிகள். மதுவிலக்கு நடைமுறைக்கு வந்த பிறகு, நாட்டில் மதுகுடிப் பழக்கத்தைப் புதிதாகக் கற்றுக் கொண்டவர்கள் மிக மிகச் சிலரே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/279&oldid=787083" இலிருந்து மீள்விக்கப்பட்டது