பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 249 இப்படி இடித்துரைத்த சது.க. போன நாட்கு வருந்துதல் பேதமை புன்மைதீரப் பெருஞ் செயல் ஆற்றுவோம் கானத்தோடு நற்பூவின் சிரிப்பொடும் காலைச் சோதிக் கதிரவன் தோன்றினான்' என்று நமக்கு நம்பிக்கையூட்டுகிறார். தொடர்ந்து, 'பூக்கள் பூத்தன புள்ளினம் பாடின புன்னகை யொளிப் பூவெங்கு மோங்கின தேக்கு ஞானத் திடமும் வலிமையும் சேர்ந்த வின்பச் சுதந்திரம் காணுவோம்.' என்று பாடும்போது, நாமும் ஒப்பித் தலையாட்டுவோம். அன்னியர் துணிக்கு எதிர்ப்பு துருக்கி நாட்டு வாலிபர்கள் பரதேசித் துணிகளை வாங்குவதில்லை யென்று சத்தியம் பண்ணியிருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, 'பாரத புத்திரர்களாகிய நாம், நம்மால் இயன்றவரை துருக்கி நாட்டு வாலிபர்களைப் பின்பற்ற முயலலாம். இதுதான் உண்மை வேலை' என்று பித்தன் அறிவுரை கூறிற்று. ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய இளைஞர்களுக்குக் கூறிய இவ்வுரையில் இன்னும் உயிர் இருக்கிறது. லஜபதிராயின் அறிவுரை லாலா லஜபதிராய் என்னும் பெரியவர், விடுதலைப் போராட்ட வீரர்களின் முன்னணியில் இருந்த முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். "பாஞ்சால சிங்கம் என்று பெருமிதத்தோடு அனைவராலும் அழைக்கப்பட்டவர். அவர் முற்போக்குச்சிந்தனையாளர். அம் மாவீரர். அந்நிய ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தபோது தடியடி பட்டு, துன்புற்று மறைந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/291&oldid=787106" இலிருந்து மீள்விக்கப்பட்டது