பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Фрь, зы, экёз, талч-9°ча» 253 மாநிலக் கல்லூரியில் எனக்கு ஆங்கிலக் கவிதைகளைப் பயிற்றுவித்த பேராசிரியர் திரு. எஸ். இ. அரங்கநாதன்தான் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். ஆங்கிலப் பேராசிரியர் தலைமையில் தொடங்கும் புதிய பல்கலைக்கழகம் தமிழுக்குப் போதிய தொண்டாற்றுமா?' என்று பலரும் ஐயப்பட்டனர். அதனால்தான் இனியும் பார்ப்போம்' என்று பித்தன் பொறுத்திருக்கச் சொல்லிற்று. - வங்காளத்தில் கல்விப் புரட்சி கல்கத்தாவில் இருந்து வெளியான "மாடர்ன் ரெவ்யூ என்ற ஆங்கில மாத இதழில் வெளியான குறிப்பினைப் பித்தன் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்திற்று. அத்தகவல் என்ன? தாழ்த்தப்பட்ட வகுப்பினர் முன்னேற்றச் சங்கம் ஒன்று 1907 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. படிப்பைப் பரப்புவதே இதன் முக்கிய வேலை. 1928-29 இல் இச்சங்கம் 242 பள்ளிக்கூடங்களை நடத்தி வந்தது. இப்பள்ளிக்கூடங்களில் 12907 ஆண் பிள்ளைகளும் 4.711 பெண் பிள்ளைகளும் கல்வி பயின்று வந்தனர். 'இந்தப் பள்ளிக்கூடங்களை நிர்வகிப்பதில் இச்சங்கத்தார் ரூ.63616 செலவழித்திருக்கின்றார்கள். துரைத்தனத்தார் உதவியது ரூ. 9210 மட்டுமே ஆகும். மீதித்தொகை முழுவதும் பிள்ளைகளுடைய சம்பளத்திலிருந்தும் நன்கொடையிலிருந்தும் சேர்க்கப்பட்டது. இது வங்காளத்தில் நடந்த அருமையான நற்றொண்டு. ஆங்கில அரசு தாழ்த்தப்பட்டவர்களுக்குப் போதிய அளவு உதவவில்லை என்பது தெரிகிறதல்லவா?" இத்தகவலை வெளியிட்ட பித்தன் தமிழ்நாட்டில் கல்வி பெருக நமது தோசாபிமானிகள் யார்தான் பள்ளிக்கூடங்களை நடத்த முன் வந்திருக்கின்றனர், எல்லாம் வாசா கைங்கரியமாகவே இருக்கின்றது. உண்மைத் தொண்டைக் காணோம்' என்று துணிந்து எழுதிற்று. இளமைக்கே உரியதல்லவா துணிச்சல். இதுவாகிலும் பெருகியிருந்தால் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு தாழ்த்த ப்பட்டோர். என்னும் நிலை, பழங்கதையாகிப் போயிருக்குமே! திருமணத்தில் சிக்கனம் "யங் இந்தியா 26-9-1929 நாள் இதழில் காந்தியடிகளார் எழுதியதின் ஒரு பகுதியைப் பித்தன் வெளியிட்டது. வேளைக்கு வேளை நம்மவர் காதுகளில் ஒலிக்க வேண்டிய அந்நல்லுரையைக் காது கொடுத்துக் கேட்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/295&oldid=787112" இலிருந்து மீள்விக்கப்பட்டது