பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 269 பச்சையப்பன் கல்லூரியோ இன்றைய சுபாஷ் சந்திரபோஸ் சாலையில், தொலைபேசி மையத்திற்கு எதிரில் நடந்து வந்தது. மூன்று கல்லூரி மாணவத் தலைவர்களும் இரவோடு இரவு திட்டந்தீட்டிச் செயலில் இறங்கினார்கள். மறுநாள், வழக்கம்போல் கல்லூரிக்குச் சென்றோம். எல்லா வாயில்களிலும் தொண்டர்கள் நின்றிருந்தார்கள். கல்லூரிக்குச் செல்லாமல் வேலை நிறுத்தஞ் செய்யும்படி வேண்டினார்கள். விளைவு? பெரும்பாலானோர் திரும்பிவிட்டார்கள். மொத்தத்தில் நூற்றுக்கு நாற்பது பேர்கள் போல, கல்லூரி வகுப்புகளுக்குச் சென்றார்கள். வேலை நிறுத்தஞ் செய்தவர்கள் ஊர்வலஞ் செல்லவில்லை. வழியில் குழப்பம் விளைவிக்கவில்லை. அமைதியாகப் போய்விட்டார்கள். காந்தி அடிகளின் அன்புக் கட்டளை மாணவத் தலைவர்கள் என்ன செய்தார்கள்? காந்தி அடிகளுக்குத் தந்தி கொடுத்தார்கள். சென்னையில் கல்லூரி மாணவர்களின் வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடந்ததாகத் தகவல் கொடுத்தார்கள். ஜவகர்லாலை நிபந்தனையின்றி விடுவிக்கும்வரை வேலை நிறுத்தத்தைத் தொடர, அண்ணலின் வாழ்த்துகளைக் கோரினார்கள். அண்ணலின் பதில் விரைந்து வந்தது. என்ன பதில்? 'அரசியல் கைதிகளைப் பற்றி மாணவர்கள் பதற வேண்டாம். அவ்விவகாரத்தை அரசியல் இயக்கங்களிடம் விட்டுவிடுங்கள்' என்பதே பதில். மாணவத் தலைவர்கள் காந்தியடிகள் கட்டளையை ஏற்றுக் கொண்டார்கள். வேலை நிறுத்தத்தைக் கைவிட்டுவிட்டார்கள். கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கின. நான் எந்தப் பிரிவில் இருந்தேன் வகுப்பிற்குச் சென்ற சிறுபான்மைப் பிரிவில் இருந்தேன். நெருங்கிய நண்பர்களில் பெரும்பாலோர் வேலை நிறுத்த ஞ் செய்தார்கள். எனினும் என் உள்ளம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே, மனச்சான்றின்படி நடந்தேன். ്ഖങ്ങഖ நிறுத்த நாளன்று, வகுப்பிற்குச் சென்ற மாணவர்கள்மீது '2வர்கள் சினங்கொள்ளவில்லை. அவர்களுக்குத் துரோகி '-டங்கட்டவில்லை: வன்முறையை நினைக்கவேயில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/311&oldid=787147" இலிருந்து மீள்விக்கப்பட்டது