பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 277 இயற்கையின் வெளிச்சத்திலேயே தாத்தா போய்ச்சேர்ந்தார். அப்புறம்? பதினாறாம் நாள் வந்தது. காரியம்' செய்ய வேண்டும். என் தந்தை என்ன செய்தார்? காரியஞ் செய்தார். எப்படி? ஞானப்பிரகாச மடம் மனம் மாறியது எங்களுக்கென்று தனி மடம் உண்டு. அது காஞ்சியில் உள்ளது. ஞானப்பிரகாச மடம் என்று பெயர். இப்போது இருப்பவர் இருநூற்று முப்பத்தொன்பதாவது பட்டம். அவ்வளவு தொன்மையானது அம்மடம். அம்மடத்திற்குக் கோரிக்கை விடுத்தார். காரியம் செய்யக்கூடிய ஒருவரை அனுப்பி வைக்குமாறு கோரினார், கோரிக்கை பலித்தது. மடத்திலிருந்து ஒருவர் வந்தார், காரியத்திற்கு முன் நாள் மாலை வந்து சேர்ந்தார். சிறிது நேரம் களைப்பாறினார். பிறகு.? தாமே சமைத்து உண்ணப் போவதாகவும், அதற்கான ஏற்பாடுகளைத் தனியே தமக்குச் செய்து கொடுக்கும்படியும் என் தந்தையைக் கேட்டார். தந்தை வெகுண்டார். "தான் செய்த நல்ல செயல்களால் சொர்க்கத்தில் இடம் பிடித்துக் கொள்ள முடியாத என் அப்பாவிற்கு, நான் செய்யும் காரிய'த்தால் இடம் பிடித்துக் கொடுத்துவிடலாம் என்னும் நம்பிக்கையால் உங்களை அழைக்கவில்லை. - "எங்கள் குடும்பங்களுக்குப் பரம்பரையாகப் புரோகிதம் செய்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு எனக்கு எவ்விதப் பகையும் இல்லை. அவர்களே எனக்கு மிகவும் வேண்டியவர்கள். "அப்படியிருந்தும் இந்தக் காரியத்துக்கு உங்களை அழைத்ததற்கு ஒரே ஒரு காரணந்தான். அது என்ன? i 'நம்மில் சிலர் உயர்ந்த சாதி என்பதை நான் ஒப்புக் கொள்வதில்லை. நம்மில் தாழ்ந்த சாதி என்று யாரையும் நான் கருதுவதில்லை. 'சமத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டே, பெரிய சாதி'ப் புரோகிதரை விலக்கிவிட முடிவு செய்தேன். 'நீங்கள், எங்களோடு உடனிருந்து உண்ணமுடியாத பெரிய சாதி காட்டிக்கொள்ள முயல்வீர்கள் என்பது எனக்குத் தெரியாமல் பாய்விட்டது. ெ 'முன்னரே தெரிந்திருந்தால் தங்களுக்கு இவ்வளவு தொல்லை

  • ாடுத்திருக்க மாட்டேன்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/319&oldid=787155" இலிருந்து மீள்விக்கப்பட்டது