பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 நினைவு அலைகள் - 'இப்போதும் ஏதும் மூழ்கிவிடவில்லை. தாங்கள் எதிர்பார்ப் பதைவிடத் தாராளமாகவே தங்களுக்குப் பணம் கொடுக்கிறேன். வண்டி வசதி செய்து கொடுக்கிறேன். நீங்கள், காரியத்தை நடத்திக்கொடுக்க வேண்டாம். வந்தபடியே சென்று வாருங்கள்' என்று என் தந்தை கூறினார். மடத்தில் இருந்து வந்தவர், இதை எதிர்பார்க்கவில்லை. ஒரே சாதிக்கு உள்ளே பல உட்பிரிவுகள்; கீழ்நாட்டார், மேல்நாட்டாரை மட்டமாக நினைத்தல், நடுநாட்டார் இரு பிரிவினரையும் இளக்காரமாக எண்ணுதல். இப்போக்குகள், நான் பிறந்த சாதிக்குள் புதிதல்ல. இதை மாற்ற முடியுமென்று எவருக்கும் நம்பிக்கை பிறந்ததில்லை; எனவே எவரும் முயன்றதில்லை. சென்ற ஈராண்டுகளில், கொண்டைகட்டி வேளாளர் சமுதாயப் பெரியவர்கள் வீட்டில் கலப்புத் திருமணங்கள் நடக்குமென்று ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் யாரும் கனவுகூடக் கண்டிருக்க முடியாது. சாதிப் பாறையைப் பிளந்தது யார்? புனிதர்கள் அல்லர் அறிவு மேதைகள் அல்லர் செல்வர்கள் அல்லர்; அரசியல் தலைவர்கள் அல்லர். பின் யார்? பெரியார் ஈ.வெ. ராமசாமியே. பட்டிக்காடுகளிலுள்ள சாதாரணப் படிப்பே படித்தவர்களும் பெரியார் வழிக்கு வந்தார்கள். பெரியார் வெற்றிகரமாக நடத்திய வைக்கம் சத்தியாக்கிரகம் எங்கள் ஊரில் எதிரொலித்ததை முன்னரே எழுதியிருந்தேன். அதன் வளர்ச்சியாகப் பிறவிப் புரோகித மறுப்பு முளைத்தது. கல்வி மணம் இல்லாத எங்கள் பக்கத்திலேயே, ஒர் உறவினர் திருமணத்தைப் புரோகிதரின்றி, என் தந்தையே நடத்தி வைத்தார். அம்மணமக்கள் பிள்ளை குட்டிகள் பெற்றெடுத்து எவ்விதக் குறையும் இல்லாமல் வாழ்ந்தனர். == என் அப்பாவின் அதிர்ச்சி மருத்துவம் பலன் கொடுத்தது. மடத்திலிருந்து வந்தவர் இறங்கி வந்தார். எங்களோடு இருந்து உண்ண உடன்பட்டார். அப்படியே செய்தார். எனவே, மறுநாள் காலை 'காரிய த்தை நடத்திவைத்தார். * 'மோட்சத்திற்கு அனுப்புவதில் நம்பிக்கையில்லாத நீ. ஏன 'காரியஞ் செய்ய முன் வருகிறாய்?' என்று நண்பர் ஒருவர். «T&57 அப்பாவைக் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/320&oldid=787157" இலிருந்து மீள்விக்கப்பட்டது