பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- - - -- - 282 நினைவு அலைகள் சொல்லடியும் கல்லடியும் பருவமழையாகக் கிடைத்தன. சளைத்தார் இல்லை. மாயூரம் எஸ். இராமநாதன், பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரிசாமி, சாமி சிதம்பரனார், பூவாளுர் பொன்னம்பலனார். மாயூரம் எஸ்.வி. லிங்கம், குத்துாசி குருசாமி முதலிய போர் வீரர்கள் அன்று இருக்க ஈ.வெ. ராமசாமிக்குக் குறையேது. மறைமலை அடிகள் அறிவுரை எதிர்ப்புச் சூறாவளிக்கிடையில், தன்மான இயக்கம் ஓங்கித் தழைத்தது. பொது மக்களிடையே இருந்த சமயநம்பிக்கை ஆட்டம் கண்டது. சென்னையிலிருந்த சைவப்பெரியார்கள் சிலர் கலக்கமுற்றனர். பிற நாடுகளில், மனித சமத்துவமும் மத நம்பிக்கைகளும் ஒன்றோடொன்று போராடுவதை விட்டுவிடவில்லையா? மத நம்பிக்கை, மனிதச் சமத்துவத்தை ஏற்றுக்கொண்டு, சம வாழ்வு வாழ்கிறதே. அதைப்போல இங்கேயும் மதம், மனிதர்களைக் கீழ்ச் சாதியாக்காமல் இருப்பதற்கு வழி சொல்ல வேண்டிய பெரியவர்கள், பதற்றத்தால், வேறேதோ செய்தார்கள். பல்லாவரம் முனிவர் என்று புகழ்பெற்ற மறைமலை அடிகளாரிடம் சென்றார்கள். முறையிட்டார்கள். "நாயக்கர் வளர்க்கும் நாத்திகத்தை மடக்கி, ஒழிக்க வரிந்து கட்டிக் கொண்டு வாருங்கள்; இயக்கம் காணுங்கள்; பம்பரம் போன்று சுழன்று பணிபுரியக் காத்திருக்கிறோம். தன்மான இயக்கத்தை எதிர்த்துப் போராட வரந்தாருங்கள் என்று வேண்டினார்கள். முனிவர் பொறுமையாகக் கேட்டார். அமைதியாகப் பதில் அளித்தார். அறிவு ஒளிரும் பதில் கூறினார். 'நம் சமுதாயம், சாதி ஏற்றத்தாழ்வு போன்ற பல தீமைகளின் கொடுமைகளின் நிலைக்களமாகிவிட்டது. இவை ஒழிக்கப் படவேண்டும். "சாதாரண முயற்சியால் இவை ஒழியா. தன் மான இயக்கத்தின் புயலும் பெரு மழையுமே இவற்றை அடியோடு அடித்துக்கொண்டு போகும். அத்தொண்டு இன்றையத் தேவை. அதற்குப் பிறகு, சமய உணர்வு மீண்டும் முளைக்கும். அவ்வுணர்வு நல் உணர்வாக, மக்களை மக்கள் அடிமைப்படுத்த உதவாத உணர்வாக ஒளிவிடும். ஆகவே, சற்றே விலகி நிற்போம்.' மறைமலை அடிகளாரின் அறிவுரையை நாமும் நினைவுபடுத்தி! கொள்வது நாட்டுக்கு நல்லது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/324&oldid=787161" இலிருந்து மீள்விக்கப்பட்டது