பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 297 'இந்த நியமனம் அண்மையில் கிடைத்தது. ஐந்து ஆண்டுக்குப் பிறகு இன்னொருவருக்குப் போகும். இதை நம்பி, சொந்தத் தொழிலை விட்டுவிட்டால், அப்புறம் யார் யாரோ இடும்பிச்சைக்கு ஏங்கிக்கிடக்க நேரிடும். மனச்சாட்சிக்கு மாறாக, எந்தெந்தக் கட்சிக்கோ கொடி துக்கும்படி ஆகும். 'அதனால், முன்னர் செய்து வந்த தொழிலையே தொடர்ந்து செய்கிறேன். ' எனக்குப் பொறுமையில்லை, என்ன தொழில்?' என்று சற்றுத் துடிப்போடு கேட்டுவிட்டேன். 'இதோ பாருங்கள், என்று கூறியபடியே அட்டைப்பெட்டி ஒன்றைத் திறந்தார். கண்டேன். எதை பளபளக்கும் காலணியை - பூட்சை, 'இது கறுப்பு: பழுப்பு நிற பூட்சு இதோ என்று சொல்லிக் கொண்டே மற்றோர் அட்டைப்பெட்டியைத் திறந்து காட்டினார். அப்படியே நான்கு இனை பூட்சுகளையும் காட்டியபின், நான் பல ஆண்டுகளாகவே, தோலை வாங்கிக்கொண்டு போய்ச் சொந்தத்தில் தைக்கிறேன். பெரிய மனிதர்களுடைய பங்களாக்களுக்குக் கொண்டு போய் விற்கிறேன். இந்தியர்கள் பங்களாக்களுக்கு மட்டுமல்ல; வெள்ளைக்காரர் பங்களாக்களுக்குமே. 'ஆங்கிலம் பேசத் தெரிவதால், ஆங்கிலேயரிடம் விற்பனை செய்ய முடிகிறது. அப்படிப்பட்ட ஒரு வெள்ளைக்கார வாடிக்கைக்காரரே, என்னைப் பற்றி ஆளுநருக்குச் சொல்லியிருக்கிறார். அது பலித்தது. எனக்கு நியமனம் கிடைத்தது. == 'அரசனை நம்பி, கணவனைப் கைவிடலாமா? தொழில் இருந்தால், என்றைக்கும் நம் காலில் நிற்கலாம். 'உங்கள் கால் அளவை எடுத்துக்கொண்டு போகிறேன். நன்றாக பூட்சை தைத்துக்கொண்டு வருகிறேன். பிடித்தால் காசு கொடுங்கள். பிடிக்காவிட்டால் எடுத்துக்கொண்டு போய்விடுகிறேன். விலை ஒன்றும் அதிகம் இல்லை. ஐந்து ரூபாய்களே! இந்த இரட்டைத் தோல் வகை ஏழரை ரூபாய்கள்' என்று ஆங்கிலத்தில் பேசினார். பொதுவாழ்க்கையைப் பிழைப்பாகக் கொள்ளாமல், தொண்டாக மட்டும் மேற்கொண்ட, அவரிடம் எனக்கு மதிப்பு ஏற்பட்டது. --னடித் தேவையில்லாதிருந்தும் ஒர் இணை பூட்சுக்கு அளவு கொடுத்தேன். குறிப்பிட்ட காலத்தில் கொண்டு வந்து கொடுத்தார். அப்போதும் உட்கார மறுத்துவிட்டார். 'வயதானவன் சொல்லுகிறேன். வருத்தப்படாதீர்கள். நான் உங்களை நாடிவருவது, சட்டமன்ற உறுப்பினனாக அல்ல; சிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/339&oldid=787177" இலிருந்து மீள்விக்கப்பட்டது