பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/346

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3O4 நினைவு அலைகள் விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு வகுப்புவாரி உரிமைக்கு உறுதியளிக்க மறுக்கும் தன்னாட்சி, மக்களுக்கான ஆட்சியாக இராது. பெரியாரின் எதிர்ப்பு முழக்கம் ஒர் சிவப்பு விளக்கு. அதை எச்சரிக்கையாக தேவையான எச்சரிக்கையாகச் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், அது இந்திய விடுதலை இயக்கத்தைத் தடுக்கக் கூடாது. விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதே என் கடமை. 'தன்னாட்சி - சுதந்திரம் - என்பது குறிக்கோள். எல்லோரும் இல்லாவிட்டாலும் பெரும்பாலோர் விடுதலைப் போருக்கு ஆதரவு கொடுத்தால், எளிதில் குறிக்கோளை அடையலாம். வகுப்புவார் உரிமையை ஏற்றுக்கொள்ள மறுப்பதால், பெரும்பாலான அடித்தள மக்கள், விடுதலை இயக்கத்திலிருந்து விலகி நிற்கிறார்கள். அதைச் கண்டு நானும் விலகி நின்று வேடிக்கை பார்ப்பது சரியல்ல. 'எனவேதான் இந்திய விடுதலைக்கு எதிராக நினைப்பதோ பேசுவதோ இல்லை. இப்படிப்பட்ட முடிவுக்கு வந்தேன். விடுதலை வீரர் அம்பிகைபாகன் இம்முடிவின் உறுதியை மதிப்பிடும் நிலை சில நாள்களில் உருவாயிற்று. இந்திய தேசிய காங்கிரசு, அப்போது மேற்கொண்ட போராட்டத்தை ஆதரிக்கும் துண்டு வெளியீடுகள் மறைவாகப் பரப்பப்பட்டன. அவ்வெளியீட்டின் பெரிய கட்டு ஒன்று, மறைவாக விக்டோரியா மாணவர் விடுதிக்குள் நுழைந்தது. கதர் அணியும் இந்திய மாணவர்களைக் காவல் துறையினர் கண்காணித்து வந்தனர். அவர்களிடம் அகப்படாமல் வெளியீட்டுச் கட்டை ஒளித்து வைப்பது எப்படி என்று சிந்தித்தார்கள். இலங்கை மாணவர் ஒருவர் அறையில் ஒளித்து வைப்பது கெட்டிக்காரத்தனமாகத் தோன்றிற்று. அவர் பெயர் என்ன? திரு அம்பிகைபாகன் என்பது பெயர். அவர் யாழ்ப்பாணத் தமிழர் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தவர். வெளி நாட்டவராயினும் இந்திய விடுதலையின்பால் நாட்டமுடையவர். காந்தியடிகளின் கட்டளையை மேற்கொண்டு, கதரே அணிந்து வந்தார். அவர் அறையில் வெளியீட்டுக் கட்டு பதுங்கிற்று. சில நாள்களுக்குப் பிறகு அவரும் காவல் துறையினர் கண்காணிப்பில் இருப்பதாகத் தோன்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/346&oldid=787185" இலிருந்து மீள்விக்கப்பட்டது