பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/347

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு Յ05 வெளியீட்டை வேறிடத்தில் ஒளிக்க வேண்டிய நிலை வந்தது. நண்பர்கள் என்னை அணுகினார்கள். ஏன்? நான் கல்லூரிகளில் சேர்ந்த பிறகு வாங்கிய வேட்டி, துண்டுகள், கதர் ஆக இருந்தன. இருப்பினும் முன்னரே வாங்கியுள்ள வெளிநாட்டு ஆலை உடைகளையும் அணிவதுண்டு. எனவே, என்மேல் காவல்துறையின் நாட்டம் விழ நாளாகும். அதற்குள் வெளியீடுகளை வழங்கிவிடலாம் என்று அன்பர்கள் கருதினார்கள். என் இசைவோடு போராட்ட வெளியீடுகள், என் அறைக்குள் குடி புகுந்தன. அங்கிருந்து சிற்சில படிகளாக வெளியேறின. சில நாள்களில் வெளியீடுகள், எல்லாம் தீர்ந்து விட்டன. காலத்தினாற் செய்த சிறு உதவி, எனக்கு நிறைவைத் தந்தது. இப்போது நினைவு கூர்ந்து பார்க்கையில், அச்சில நாள்களில் நான் காவல்துறை யிடம் சிக்கிக் கொண்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்னும் எண்ணம் பீறிட்டு வருகிறது. என் வாழ்க்கை எத்திசையில் திரும்பியிருக்குமோ? அளகேசன் கல்லூரிப் படிப்பைத் துறந்தார் காந்தியடிகளின் தலைமையில் தண்டிவரை நடந்து சென்று, உப்புக் காய்ச்சும் போரில் பங்குபெறத் துடித்துக்கொண்டு சென்ற திரு. அளகேசன் சில நாள்களில் சென்னைக்குத் திரும்பி வந்தார். ஏன்? சபர்மதி ஆசிரமத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே, காந்தியடிகள் தலைமை தாங்கிய போராட்ட அணியில் சேர்ந்து தண்டிக்கு செல்லலாம் என்பது விதி. அவ்விதிக்கு விலக்கு அளிக்க மறுத்து விட்டார்கள். அதனால், அளகேசன் அந்த அணியில் இடம் பெறவில்லை. இருப்பினும் மனந்தளரவில்லை; மனம் மாறவில்லை; வெறுப்புக் கொள்ளவில்லை. சென்னைக்குத் திரும்பி வந்த அளகேசன், கல்லூரிக்குத் திரும்பி வரவில்லை; தேர்வு எழுதவில்லை. நாட்டுக்குத் தொண்டாற்றவே சென்று விட்டார். வேதாரண்யத்தில் விடுதலைப் போர் இந்திய விடுதலைப் போராட்டத்தில், தென்னிந்திய மக்களும் தங்களுக்குரிய பங்கை ஏற்கத் தயங்கவில்லை. 'காந்தியடிகள் தலைமையில், 1919 இல் ஆரம்பமான புதுப் போராட்டத்தின் முன்னணியில் தென்னிந்திய மாகாணங்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/347&oldid=787186" இலிருந்து மீள்விக்கப்பட்டது