பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/349

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 307 காந்தியப் போராட்ட முறைக்கேற்ற புற, அகநிலைகள், வேதாரண்யம் என்று அழைக்கப்படும் திருமறைக்காட்டைச் சுற்றிப் போதிய அளவு பயிராக்கப்பட்டிருந்தன. பயிரிட உதவிய பல நாட்டுப் பற்றாளர்களின் முன்னே நிற்பவர் எவர்? திரு. வேதரத்தினம் பிள்ளை. சர்தார்வேதரத்தினம் இந்திய விடுதலை இயக்கத்தின் குறுமுனியாக விளங்கிய திரு. வேதரத்தினம், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் பட்டியலில் இடம் பெற்றவர். இவர் விடுதலை உணர்வின், வீரத்தின் திருஉருவாக விளங்கினார்: தியாகத் திரட்சியாக வாழ்ந்த இந்நல்லார் இளமையிலேயே இந்திய உரிமைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டார். காந்தியடிகளின் ஒத்துழையாமை, கதர் அணிதல் முதலிய திட்டங்களை உளமார ஏற்றுக் கொண்டார். திரு. வேதரத்தினம் அவர்களுடைய தந்தையார் திருமறைக்காட்டில் பெரிய துணி வணிகராக இருந்தார். அன்னியத் துணி விலக்கல் திட்டத்தை காந்தி அடிகள் நாட்டு மக்கள் முன் வைத்தபோது, அவர், அன்னியத் துணிக் கடையை மூடிவிட்டார். அதனால் முதல் இழப்பும் தொழில் இழப்பும் ஒன்று சேர்ந்தன. கதர் வணிகம் இழப்புகளை ஈடுசெய்யவில்லை. அக்கால விடுதலை வீரர்கள் பலருடைய குடும்பங்களைப் போன்று திரு. வேதரத்தினம் பிள்ளை அவர்களின் குடும்பமும் நாட்டுத் தொண்டிற்காக இன்னல் பல ஏற்க நேர்ந்தது. முனு முணுப்பின்றி, குடும்பம் முழுவதுமே கதர் அணிந்தது; எளிய வாழ்க்கையை மேற்கொண்டு வழிகாட்டிற்று. திரு. வேதரத்தினம் தன் சிந்தனை உழைப்பு, நேரம், முயற்சி ஆகிய அனைத்தையும் பாரதப் பெருநாட்டின் விடுதலை இயக்கத்திற்கே காணிக்கையாக்கி விட்டார். சுழன்று சுழன்று, பொதுமக்களிடையே நாட்டுப்பற்றை வளர்த்தார். காந்திய வழியைப் பின்பற்றும் உறுதிபெற்ற பலரையும் உருவாக்கினார். திரு. பிள்ளை அவர்களின் உண்மையான நாட்டுப்பற்றும் தன்னலங்கலவாத பொதுத் தொண்டும் கூட்டமைப்புத் திறனும் வேதாரண்யப் பகுதியை விடுதலை இயக்கத்திற்குப் பொருத்தமான களமாக்கியிருந்தது. வரலாற்றுச் சிறப்புடைய வேதாரண்ய உப்புச்சத்தியாகிரகத்திற்காக, திரு. வேதரத்தினம் பிள்ளை அவர்கள் ஆற்றிய தொண்டு பெரிது: "டுத்துக்காட்டானது. எவ்வளவு சிறப்பானது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/349&oldid=787188" இலிருந்து மீள்விக்கப்பட்டது