பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 31 T சில நாள்களுக்குப் பிறகு, சீனிவாசன் மீண்டும் சோமுவைத் தேடி வந்தார். சோமு அப்போது அறையில் இருந்தார். சோமு வந்தவரை அழைத்துக்கொண்டு என் அறைக்கு வந்தார்; எனக்கு அறிமுகம் செய்து வைததாா. முன்னே, முகந்திரிந்து நோக்கியதற்கு ஈடுசெய்தேன். பரிவோடு வரவேற்றேன்; பாசத்தோடு பழகினேன். அதுமுதல் எவரிடமும் முனைப்போடு நடந்து கொள்வதில்லை என்று உறுதி பூண்டேன்; அதில் இருந்து இதுவரைதளர்ந்ததாக நினைவு இல்லை. திரு. சீனிவாசன், திரு. மீ. பக்தவத்சலம் அவர்கள் வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். திரு. ப. சு. கைலாசம், சீனிவாசனின் நண்பர்; வகுப்பு மாணவர். மயிலாப்பூரில், இராமகிருஷ்ண மடத்திற்கு அருகில் ஒரு பங்களாவில் குடியிருந்தார். சீனிவாசனால் அவரும் எனக்கு அறிமுகமானார்; நல்ல நண்பரானார்; மிக ெ நருங்கியவரானார். திரு. கைலாசம் உயர்நீதிமன்ற நீதிபதி ஆன பிறகே நான் விலகி இருக்கத் தொடங்கினேன். அதுவரை என்னைக் கிண்டல் செய்யும் நண்பர்கள். 'நெ.து. சு. வை எங்கே தேட கைலாசத்தில், வைகுண்டத்தில், பூலோகத்தில் துரெளபதி கோயிலில் தேடினால் கிடைக்கலாம்." என்பார்கள். கைலாசம் என்பது சீனிவாசனின் வீட்டை, துரெளபதி கோயில் என்பது பி.ஏ. சிறப்பு வகுப்பில் என்னுடன் சேர்ந்து மிக நெருக்கமாகிய திரு. தொரைபதியின் வீட்டைக் குறிக்கும். மாணவர்கள் மட்டுமல்ல என் நண்பர்கள் வெளியாரிடமும் எனக்கு நட்பு உண்டு. மி திரு. பெரியசாமித் தூரன், திரு. கு.சு. பெரியசாமி ஆகியவர்களுக்கு

  • வும் வேண்டியவர் சது. சுப்பிரமணிய யோகி.

அவர் எங்கள் பித்தனுக்குப் பல சிறந்த கட்டுரைகள் எழுதியுள்ளார். 'ர் சாதியொழிப்பிற்கு உடன்பாடானவர். அவர் அடிக்கடி 'கள் விடுதிக்கு வருவார்; மேற்கூறிய நண்பர்களோடு தங்குவார். 'வித் தேடி அவருடைய நண்பர் ஈரோடு ர்ேத்திவாசும் சிலபோது 'கு வருவது உண்டு. ് தொடக்கத்இல் காங்கிரசில் தொண்டாற்றியவர். பெரியாரின் துழைவுக் கொள்கைக்கு மிக உடன்பாடானவர். "G

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/353&oldid=787193" இலிருந்து மீள்விக்கப்பட்டது