பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312 நினைவு அலைகள் ஒரு முறை அவரைத் தேடிச் சுயமரியாதை இயக்கத் தொண்டர்களில் முன்னோடியான மாயூரம் எஸ்.வி. லிங்கம் வந்தார். - அவர் கலகலப்பானவர். பெரியசாமிகளின் அறைகளைத் தேடிக்கொண்டிருந்த அவர், விடுதியின் தாழ்வாரத்தில் என்னைக் ді, сті ТІ ПТПТ. வழி கேட்கும்போது, தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். அதோடு, தம்முடன் வந்த இளைஞர் ஒருவரையும் அறிமுகம் செய்து வைத்தார். இளைஞர் குத்துசி குருசாமி அவர் பெயரைக் கேட்டதும் எனக்கு மட்டிலா மகிழ்ச்சி. ஏன்? அவரோடு அதுவரை நேரில் பழகவில்லை. எனினும் உணர்வால் நட்பு கொண்டிருந்தேன். அவருடைய எழுத்துகளைப் படித்துள்ளேன். அவை எனக்குப் பிடிக்கும். அவர் யார்? அவர் திரு. எஸ். குருசாமி. அவர்கள் கண்கள் ஒளிபொழிந்தன. முகமோ கவர்ச்சியாக இருந்தது. பேச்சில் இனிமையும் உண்மையும் கலந்திருந்தன. எவரும் கண்டதும் நட்புக் கொள்வார்கள். அத்தகைய பண்பு அவரிடம் இருந்தது. எனக்கு அறிமுகமாகும்போது திரு. எஸ். குருசாமி ஆயிரக்கணக்கான மற்ற இளைஞர்களைப் போன்றவர் அல்லர் விளம்பரமான இளைஞர்: பெரியார் ஈ.வெ.ரா.வுக்கு மிகவும் வேண்டியவர்; அவருடைய குடியரசு வார இதழில், துணை ஆசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். இளைஞர் குருசாமி, தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆழ்ந்த புலமைபெற்று இருந்தார். அதோடு இரு மொழிகளிலும் நன்றாகப் பேசவும் எழுதவும் வன்மை பெற்றிருந்தார். எப்போது? 1929 திலேயே; இளமைப் பருவத்திலேயே. திரு. குருசாமி தஞ்சைத் தரணியில் பிறந்தவர் சேக்கிழார் மரபைச் சேர்ந்தவர். அடக்கமான சமயப்பணி ஆற்றி வந்த தந்தை திருசாமிநாதர் இவரை நல்ல சைவப்பற்றோடு வளர்த்து வந்தார். ஒழுங்கிலும், ஒழுக்கத்திலும், பண்பாட்டிலும் உருவாக்கிவந்தார். திரு. குருசாமி அப்படிப்பட்ட தந்தையைச் சிறு வயதிலேயே இழந்து விட்டார். சில ஆண்டுகளில் தாயையும் பறிகொடுத்தார். சிறுவர் குருசாமிக்குத் தங்கைகள் இருவர். மூவரையும் அவர்களுடைய அத்தை எடுத்து அன்புடன் வளர்த்தார்கள்; கல் கொடுத்தார்கள். திருவாரூர் கழக உயர்நிலைப்பள்ளியில் படித்துத் தேர்ச்சி பெற்ற திரு. குருசாமி திருச்சி தேசியக் கல்லூரியில் சேர்ந்தார். திரு. சாரனாதனிடமும் திரு. இராம அய்யரிடமும் படித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/354&oldid=787194" இலிருந்து மீள்விக்கப்பட்டது