பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/355

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 313 தம்முடைய ஆங்கிலப் புலமைக்கும் ஆற்றலுக்கும் இவ்விரு ஆங்கிலப் பேராசிரியர்களே வேர்கள் என்று சொல்லிச் சொல்லி மகிழ்வார் திரு. குருசாமி. பேராசிரியர் இராம அய்யர், ஐம்பதுகளிலும் சென்னைக்கு வந்தால் தம்முடைய பழைய மாணவர் குருசாமியை வந்து பார்ப்பது உண்டு. இருவரிடையே இருந்த பாசமும் பரிவும் மற்றவர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கின. தேர்வு முறைக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அது என்ன? அறிஞர்களுக்குத் தோல்விப் பட்டயம் வழங்கும். இரண்டுங் கெட்டான்கள் பலருக்குத் தன் வெற்றி மாலையைச் சூட்டும். இலக்கியத்திற்காக உலகப் பரிசு பெற்ற சர்ச்சில், பள்ளிக்கூடத்தில் மேல் வகுப்பில் தோல்வி முத்திரை குத்தப்பட்டவர். கணித மேதை இராமானுசத்தைப் "பெயில் ஆக்கிய பெருமை, கும்பகோணம் அரசினர் கல்லூரிக்கு உண்டு. திரு. குருசாமியும் பி.ஏ. தேர்வில் ஒரு பகுதியில் முதன்முறை தவறிவிட்டார். சைவப் பற்றுடையவராக, நீறு பூசிய நெற்றியராகத் தேசியக் கல்லூரியில் அடியெடுத்து வைத்த குருசாமியார், பழுத்த காங்கிரசு வாதியாக விளங்கினார். கதர் மயமாகக் காட்சியளித்தார். மணிபர்ஸ்கூடக் கதரால் ஆனது. இப்படியிருக்கையில் பூவாளுர் திரு. அ. பொன்னம்பலனார் என்பவர் திரு. குருசாமிக்கு நண்பர் ஆனார். திரு. அ. பொன்னம்பலனார் சைவ உலகில் சுடர்விட்டுப் பின்னர் பெரியாரிடம் சேர்ந்தவர். அவர் வழியாகச் சுயமரியாதை இயக்கத்தின் வார இதழாகிய குடியரசைப் படிக்கத் தொடங்கினார் திரு. குத்துாசி குருசாமி, தொடர்ந்து படித்தார். சுயமரியாதைக்காரராகி விட்டார். 1928இல் பி.ஏ. தேர்வு எழுதி முடித்த திரு. குருசாமியை திரு. அ. பொன்னம்பலனார், ஈரோட்டிற்கு அழைத்துச் சென்றார்; பெரியார் ஈ.வெ.ராவிடம் அறிமுகம் செய்து வைத்தார். திரு. குருசாமி, சுயமரியாதை இயக்கத்திற்குக் கிடைத்த நல்ல 'புதையல் என்பதைப் பெரியார் சில மணித்துளிகளில் உணர்ந்து விட்டார். தம்முடைய குடிஅரசு' இதழில் துணை ஆசிரியராக அமர்த்திக் கொண்டார். திரு. குருசாமிக்கு, புகைபிடித்தல், பொடிபோடுதல் முதலிய தீய 'ழக்கம் ஏதும் கிடையாது. எப்படிப்பட்டவர்களையெல்லாமோ பொறுத்துக்கொண்டு இயக்கத்தை நடத்திய பெரியாருக்கு எந்தத் தீய பழக்கமும் இல்லாத திரு. குருசாமி, செல்லப்பிள்ளையாகிவிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/355&oldid=787195" இலிருந்து மீள்விக்கப்பட்டது