பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 315 அத்திருமணத்தில் எவ்விதச் சடங்கும் இல்லை. பெரியாருக்குத் தாட்சணியப்பட்டு, திரு. குருசாமி, செல்வி குஞ்சிதத்திற்குத் தாலி அணிவித்தார். திரு. குருசாமி, திருமதி குஞ்சிதத்தை முழுக்க முழுக்க தன்மான உணர்வு உடையவராக்கிவிட்டார் ஆண்கள் பெண்களுக்குத் தாலி கட்டுவது பெண்களை அடிமைப்படுத்துவதன் அடையாளம் என்பது தன்மான இயக்கத்தின் முடிவு. அக்கருத்தினை மேடை தோறும் திரு. குருசாமி முழங்குவார். அதைக் கேட்ட திருமதி குஞ்சிதம் குருசாமி சில ஆண்டுகளுக்குள் தாலியைக் கழற்றி வைத்துவிட்டார். அது மட்டுமா? பெண்கள், நெற்றியில் குங்குமம் இட்டுக் கொள்வது, இந்து சமயச் சார்புடைய பழக்கம். சமயச் சார்பற்ற பகுத்தறிவாளர்கள் நெற்றியில் அத்தகைய குறியிட்டுக் கொள்ளக்கூடாது. இதுவும் தன்மான இயக்கச் சாரல். திருமதி குஞ்சிதம் அம்மையார் சில ஆண்டுகள் நெற்றியில் பொட்டு இட்டுக் கொள்ளும் பழக்கத்தையும் விட்டுவிட்டார். குஞ்சிதம் குருசாமி தம்பதிகள் காலமெல்லாம் தூய்மையான நாத்திகர்களாகவே வாழ்ந்து வந்தார்கள். எழுத்தால் என்னைக் கவர்ந்திருந்த திரு. குருசாமி கலப்புத் திருமணம் செய்து கொண்டதனாலும் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார். தொண்டை மண்டல கொண்டைகட்டி வேளாளர்களில், ஊரறிய முதன் முதலாகக் கலப்புத் திருமணம் செய்து கொண்டவர் சா. குருசாமியே ஆவார். குஞ்சிதம் குருசாமி திருமணம் 1929ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் நாள் நடைபெற்றது. இம்முன்னோடி நிகழ்ச்சி, புதிய திருப்பம். பல கலப்புத் திருமணங்களுக்குத் துண்டுகோலாக அமைந்தது. நெருப்பு ஆற்றில் வாழ்நாள் முழுவதும் எதிர்நீச்சல் சமுதாயப் புரட்சி, மற்ற புரட்சிகளைக் காட்டிலும் ஆபத்தானது. அரசியல் புரட்சியாளனுக்குத் துரக்குமேடை காத்திருக்கும். நொடிப் பொழுதில் வதை முடிந்துவிடும். பொருளியல் புரட்சியாளனுக்கும் அத்தகைய கைம்மாறே காத்திருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/357&oldid=787197" இலிருந்து மீள்விக்கப்பட்டது