பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/361

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. பெரியாருடன் சந்திப்பு பல்கலைக் கழகத் தேர்வுக்கு அஞ்சவில்லை அன்பர் ஒ.வி. அளகேசன், படிப்பை விட்டுவிட்டு, தண்டி யாத்திரையில் கலந்து கொள்ளப்புறப்பட்டதால் ஏற்பட்ட அதிர்ச்சியை இரண்டொரு நாள்களில் சமாளித்து விட்டேன். முன்னர்க் குறிப்பிட்டதுபோல், மாணவனாக இருந்து கொண்டே படிப்பிற்கு இடையூறு இல்லாமல், அணில் அளவு தொண்டை, விடுதலை இயக்கத்திற்கு ஆற்றினேன். அதோடு தேர்வுக்கு ஆயத்தமாவதில் மூழ்கிவிட்டேன். முறையாகப் படித்து வந்தேன். ஆனால் விடிய விடியக் கண் விழித்துப் படிக்கவில்லை. ஏன்? சோம்பலா? இல்லை. விடிய விடியப் படிக்கத் தேவையேற்படவில்லை. அப்படியென்ன அதிகப்படியான அறிஞனா? இல்லை. - நான் முதல் தலைமுறையாக உயர் கல்வியில் காலெடுத்து வைத்தேன். ஆகவே மற்றவர்களைக் காட்டிலும் அதிக அக்கறையோடு படித்தால் தான் தேர்ச்சி பெற முடியுமென்பதை என் தந்தை உணர்த்தியிருந்தார். தந்தையின் அறிவுரை என் நெஞ்சில் பசுமரத்தானிபோல் பதிந்து இருந்தது. வகுப்பறையில் பாடங் கேட்கும்போது, கவனத்தைப் பாடத்தின் மேல் குவிப்பேன்; சிந்தனையைச் சிதறவிட மாட்டேன். மனம் ஒன்றிக் கேட்ட பாடங்கள் எளிதாகப் பதிந்தன. விடுதி அறையில் மறுபடியும் சிலமுறை புரட்டிப் பார்த்தேன். படித்தவை நினைவில் நின்றன. எனவே, தேர்வு பற்றி என்னிடம் எவ்வித அச்சமும் தோன்றவில்லை. தேர்வுநாள்களின்போது எவ்விதப்பதற்றமும் இன்றி எழுதி முடித்தேன். கோடை விடுமுறை விடுமுறை வந்தது. ஊருக்குச் சென்றேன். இழுபறியாகச் சில 'ள்கள் சென்றன. இளநீரும் நுங்கும் மாம்பழமும் பலாச்சுளையும் வேண்டிய அளவு தாராளமாகக் கிடைத்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/361&oldid=787202" இலிருந்து மீள்விக்கப்பட்டது