பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 321 ஈரோடு சுயமரியாதை மாநாட்டை ஒட்டி, மற்றோர் மாநாடும் வெகுசிறப்பாக நடந்தது. அது என்ன? பார்ப்பனரல்லாத சங்கீத வித்வான்கள் மாநாடு ஆகும். அம்மாநாடு ஏன் தேவைப்பட்டது? பார்ப்பனரல்லாத இசைக்கலைஞர்களுக்கு இருந்த இழிநிலை அக்காலத்தில், காஞ்சிபுரம் நாயனாப்பிள்ளை, மதுரை பொன்னு சாமிப்பிள்ளை போன்ற வாய்ப்பாட்டு வல்லுநர்களுக்கும், திருவாவடு துறை இராஜரத்தினம், வீருசாமிப் பிள்ளை போன்ற நாயனக்காரர் களுக்கும் அதிக கிராக்கி. ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து அவர்களை அழைப்பார்கள். அவர்களுடைய பாடல்களையும் வாசிப்புகளையும் மெய்மறந்து சுவைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள். அவர்களை மட்டமானவர்களாகவே நடத்துவார்கள். அதுவும் நாயனம் வாசிப்போரை அதிகம் இழிவுபடுத்தினார்கள். அக்காலத்தில் நாயனக்காரர்கள் எவ்வளவு திறமைசாலிகளானாலும் உடம்பின்மேல் சொக்காய் போட்டுக் கொண்டு வாசிக்கக்கூடாது. வெறும் மார்பின் மேல்துண்டு போட்டுக் கொண்டும் வாசிக்கக்கூடாது. துண்டை இடுப்பிலே செருகிக் கொள்ளவேண்டும். வியர்வை கொட்டும்போது வேண்டுமானால் அதை எடுத்துத் துடைத்துக் கொள்ளலாம். மறுபடியும் இடுப்பில் செருகிக் கொள்ள வேண்டும். அந்த விபரீத அகந்தையை வித்வான்களால் எதிர்க்க முடியவில்லை. பிற கொடுமைகளைத் தாங்கிக் கொண்டதுபோல, இதையும் பொறுத்துக் கொண்டு காலத்தை ஒட்டினார்கள். பெரியார் ஈ.வெ.ரா. சுயமரியாதை இயக்கத்தின் தொடக்க காலத்தில் ஒரு முறை, கானாடுகாத்தான் என்ற ஊருக்குச் சென்றிருந்தார். அவரோடு பட்டுக்கோட்டை திரு. கே. வி. அழகிரிசாமியும் சென்றிருந்தார். பிந்தியவருக்கு நாயனப் பித்து. இவர்கள் இருவரும் கானாடு காத்தானில் இருந்தபோது ஒரு செல்வர் 'ட்டுத் திருமணத்தில் திரு. சிவக்கொழுந்து என்னும் புகழ்பெற்ற இசைஞர் நாயனம் வாசித்தார். அதைக் கேட்க, திரு. அழகிரிசாமி சென்றார். வித்வான் அடிக்கடி துண்டை எடுப்பதையும் துடைத்துக் கொள்வதையும் செருகிக் கொள்வதையும் கண்டார். மனம் பதறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/363&oldid=787204" இலிருந்து மீள்விக்கப்பட்டது