பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 33 தேர் திருவிழாக் காலங்களில் நடனம் ஆடி, இசை பாடி, தொண்( செய்யவேண்டும். இறைவன் தொண்டிற்கு என்று சில பெண்க.ை ஒதுக்கி வைத்தல் என்னும் இயற்கைக்கு மாறான கோட்பாட்டால் நாட்டில் கூடாஒழுக்கம் ப்ரவிற்று. பிறவியிலேயே பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் இழிவுக்குட விரும்பாச் சேர்க்கைக்கும் ஒழுக்கக் கேட்டிற்கும் தள்ளப்பட்டன. இக்கொடுமையைக் கண்டு கொதித்தெழுந்தவர்களில், டாக்ட முத்துலெட்சுமி ரெட்டி என்பவர் தலையாய தமிழர். அவர், சென்னை: சட்டமன்றத்திற்குத் துணைத்தலைவர் ஆனார். திருமதி. முத்துலெட்சுமி ரெட்டியார், பொட்டுக்கட்டும் வழக்கத்தை ஒழிக்கச் சட்டமொன்று கொண்டு வந்தார். அதற்குப் பல பக்கங்களிலிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்பிற்று. அரசியல் விடுதலை மேடைகளில் முன்னணியில் இருந்தவர்கள் சிலர், பொட்டுக் கட்டுவதைப் பற்றி நாணித்தலைகுனிவதற்குப் பதில், பொட்டுக் கட்டுதல் தொடர வேண்டுமென்று வாதாடினர்; முழங்கினர். தந்தை பெரியாரும் அவரது இயக்கமும் தீவிர பிரசாரம் செய்து, ஆதரவு திரட்டியதால், பொட்டுக்கட்டும் இழிவு பழங்கதையாகி விட்டது. ஈரோட்டு இளைஞர் மாநாடு இதுபற்றி எடுத்த முடிவைப் பாருங்கள். 'எதிர்கால வாழ்க்கையை உணர்ந்து கொள்ள முடியாத சிறுமிகளை, கடவுளின் பேரால் பொட்டுக்கட்டிப் பொருளுக்காக நிர்ப்பந்தக் காதலில் ஈடுபடுத்தும் அநாகரிகமான பழக்கத்தை ஒழிக்க, இளைஞர்களும் முன் வருவதோடு, பொட்டுகளை அறுத்தெறிந்து விட்டு முன்வரும் சகோதரிகளை ஆதரித்துத் திருமணம் செய்துகொள்ள இளைஞர்கள் தைரியமாக முன்வரவேண்டுமென்று மாநாடு முடிவு செய்கிறது. கர்ப்பத் தடை கர்ப்பத் தடை பற்றி எல்லோரும் கவனம் செலுத்துமாறு அம்மாநாடு பொதுமக்களைக் கேட்டுக் கொண்டது. சீரிய கருத்தினை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்டு நடைமுறைப்படுத்த முயன்ற, :35 «Татлі гултgут இயக்கத்தவர். ஏற்ற பழி கொஞ்சமல்ல. இலவசக் கல்வி சிாதர் மாநாட்டில் முதல் முடிவு என்ன தெரியுமா? ஆண் பெண் 'அம் இருபாலருக்கும் கட்டாய இலவசப் படிப்பு, சீக்கிரம் கொடுக்க "விண்டுமெனவும் பெண் பாலரைக் குறைந்தது பதினாறு வயது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/373&oldid=787217" இலிருந்து மீள்விக்கப்பட்டது