பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ-து. சுந்தாவடிவேலு 337 இவை அவரைக் காப்பாற்றின. உடல்நலம் பெற்ற திரு. சின்னசாமி ஊருக்குச் சென்றார். ஆசிரியப் பணியை மீண்டும் மேற்கொண்டார். ஒழுங்கை, கட்டுப்பாட்டை, கல்வியை வளர்ப்பதில் உழைத்துப் பெயர் பெற்று விளங்கினார். நான், மாவட்டக் கல்வி அலுவலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது என்னைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். - நன்றி தெரிவித்துப் பதில் எழுதிய நான் திரு. சின்னசாமிக்கு ஒர் வேண்டுகோள் விடுத்தேன். அது என்ன? பொதுக்கல்வி, கணக்கு, அறிவியல் பாடங்களைக் கற்பித்தல் பற்றிய நூல்கள், அவருடைய கவனத்திற்கு வரும்போது, என் கவனத்திற்கும் கொண்டு வரும்படி வேண்டிக்கொண்டேன். அப்படியே செய்தார். கோவை தொழிலதிபர்கள் திருவாளர்கள் ஜி. கே. சுந்தரம் குடும்பத்தினர் பிற்காலத்தில் ஒர் உயர்நிலைப்பள்ளியை நிறுவினார்கள். மாவட்டக் கழக உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக ஒளிவிட்டுக் கொண்டிருந்த திரு. சின்னசாமியைத் தங்கள் 'மணி உயிர்நிலைப்பள்ளி யின் தலைமையாசிரியராகத் தட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள். புதிய பள்ளிக்குப் புதையல் கிடைத்தது. திரு. சின்னசாமி தொடக்க நாள் முதல் மணி உயர்நிலைப் பள்ளியை மனியான பள்ளியாக உருவாக்கினார். ஆசிரியர்களைச் சென்ற நூற்றாண்டின் கிறுத்துவத் தொண்டர்களைப்போலத் தொண்டாற்றச் செய்தார். பெற்றோரும் மற்றோரும் மெச்சிப் புகழும் எண்ணற்ற பையன்களையும் பெண்களையும் உருவாக்கி அனுப்பினார். திறமையும் பெருமையும் வளர்ந்தபோதிலும் காட்சிக்கு எளியராக, கடுஞ்சொல் இலராகத் தொண்டாற்றினார். நல்லாசிரியர் விருது பெற்றார் ஆள் பாதி; ஆடை பாதி' என்பது, பொருள் பொதிந்த பழமொழி. உயர்ந்த தோற்றமுடையவர், திரு. சின்னசாமி. வீட்டிலோ, வெளியிலோ, சொந்த வேலையில் ஈடுபடும்போது, எளிய உடையிலேயே அவரைக் காண முடியும். ஆடம்பரம் அவர் அறியாதது. ஆயினும் பள்ளிக்கோ, பள்ளி வேலையாகவோ, ஆசிரியக் குழுக் கூட்டங்களுக்கோ செல்லும்போது, பொலிவான உடையிலே போவார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/379&oldid=787223" இலிருந்து மீள்விக்கப்பட்டது